பாராலிம்பிக்கில் சோகம்: ஈரான் வீரர் மாரடைப்பால் மரணம்

பதிவு செய்த நாள்

19
செப்டம்பர் 2016
00:46

ரியோ டி ஜெனிரோ

ரியோ பாராலிம்பிக் சைக்கிளிங் போட்டியின் போது ஈரான் வீரர் சர்பராஸ் பஹ்மான் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வந்தது. இத்தொடரின் கடைசி  நாளான இன்று சி4/சி5 சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்பராஸ் பஹ்மான், சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை போட்டியாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதை டாக்டர்கள் உறுதி செய்தனர். 

போட்டியின் போது நடந்த இந்த சோக சம்பவத்தால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஹ்மானின் மரணத்திற்கு தேசிய பாராலிம்பிக் கமிட்டி உள்பட விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த சோக சம்பவத்தைத் தொடர் ந்து பாராலிம்பிக் நடைபெற்று வரும் ஒலிம்பிக் கிராமத்தில் ஈரான் நாட்டு கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. 48 வயதான பஹ்மானுக்கு இது  இரண்டாவது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.