குருபெயர்ச்சி: தோஷங்களை குறைக்க வழிபாடு

பதிவு செய்த நாள்

03
ஆகஸ்ட் 2016
02:25

ஆடி பதி­னெட்­டாம் பெருக்கு, ஆடி அமா­வா­சை, குருப்­பெ­யர்ச்சி மூன்றும் இணைந்து ஒரே நாளில் வரு­வது 100 ஆண்­டு­­­ளுக்கு பிறகு இந்த ஆண்­டுதான். இது இன்றைய குருபெயர்ச்சியின் சிறப்பு அம்சம் ஆகும்.

 தேவர்­களின் குருபிரகஸ்­­பதி ஆவார். இவர் நவ­கி­­கங்­­ளுக்கும் தலைமை ஸ்தானம் பெறு­பவர். குரு என்ற வியா­­கி­­கத்தின் பார்வை சிறப்பு வாய்ந்­தது. குரு பார்க்க கோடி நன்மை என்று குறிப்­பி­டு­வார்கள். குரு­வுக்கு தான் நின்ற இடத்­தி­லி­ருந்து 5,7,9–ம் வீட்டில் பார்­வைகள் உண்டு.

 ஒரு ராசியில் ஒரு ஆண்டு வீதம் 12 ராசி­களை சுற்றி சிம்­­ரா­சிக்கு குரு மீண்டும் வரும் பொழுது   12 ஆண்டுகள் ஆகி­றது. ஒரு மாமாங்கம்.

கும்­ப­கோ­ணத்தில்  மங்­க­ளா­ம்­பிகை சமேத கும்­பேஸ்­வ­ர­ருக்கு மாமாங்­கத் திரு­விழா நடக்கும். மகா­மகக் குளத்தில் நீராடும் வைபவம் அப்பொழுது பிரபலம்.

இந்த துன்­முகி ஆண்டில் ஆடி­மாதம் அமா­வாசை திதி­யன்று ஆடிப் பதி­னெட்டாம் பெருக்­கு நாளில் செவ்­வாய்­கி­ழமைஆடி பதினெட்­டாம் தேதி 02.08.2016 அன்று பூசம் நட்­சத்­திரம் காலை புதன் ஹோரை­யில் 9.37 மணிக்கு சிம்ம ராசி உத்­திரம் 1–ம் பாதம் நட்­சத்­தி­­ரத்­தி­லி­ருந்து கன்னி ராசி உத்­திரம் 2–ம் பாதத்­திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். இங்கு 2.8.2016 முதல் 1.9.2017 வரை ஒரு ஆண்டு காலம் கன்னி ராசியில் உத்­தி­ரம், ஹஸ்­தம், சித்­திரை ஆகிய நட்­சத்­திர பாதம் ஏறி சஞ்­­ரிப்பார். இதில் குரு, ஹஸ்த நட்­சத்­திர பாதத்தில் சஞ்­­ரிக்கும் பொழுது உத்­தம பலன்கள் சுப பலன்­கள், பொரு­ளா­தார மேன்மை என நற்­­லன்கள் அதி­­மாக கன்னி ராசிக்­கா­ரர்­­ளுக்கு இருக்கும்.

குரு பார்க்க கோடி நன்மை என்­பது போல் ஒவ்­வொரு ராசிக்கும் குருவின் பார்­வை­யா­ன 5,7,9 ஆகிய மூன்­று ஸ்தா­னங்­க­ளுக்­கு­ரிய பலன்கள் இருக்கும்.

இந்த ஆண்டு குருப்­பெ­யர்ச்சி ரிஷ­பம், சிம்­மம், விரு­ச்­சிகம், மக­ரம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்­கா­ரர்­க­ளுக்கு முறையே 5,2,11,9,7 ஆகிய ஸ்தா­னங்கள் பெற்று நற்­ப­லன்கள் வழங்­குவர். மேஷம், மிது­னம், கட­­கம், கன்­னி, துலாம், தனு­சு, கும்பம் – ஆகிய ராசிக்­கா­ரர்கள் குரு வழி­பாடு தட்­சிணாமூர்த்தி வழி­பாடு செய்­வ­து தோஷ நிவர்த்தி மற்றும் பரி­கா­ர­மாக அமையும். திரு­ம­ணம், குழந்தை பாக்­யம் போன்ற  சுப பலன்கள் அதி­க­மாக இருக்கும். நெல்லையைப் பொறுத்த அளவில் குரு பகவான் தோஷம் நீங்க வழி­பட்ட தலம் திருச்­செந்தூர் முருகன் கோயில் அதே போல் குருவும் வாயுவும் இணைந்து வழி­பட்ட தலம் ஸ்ரீ குரு­வா­யூ­ரப்பன் கோயில் – குரு­ வழி­பட்ட செந்தூர் முரு­க­னையும் குரு­வா­யூ­ரப்­ப­னையும் வழி­ப­டுங்கள் .தோஷம் நீங்கும். சிர­மங்கள் குறை­யும்.  ஆடி பதி­னெட்­டாம் பெருக்கு, ஆடி அமா­வா­சை, குருப்­பெ­யர்ச்சி மூன்றும் இணைந்து ஒரே நாளில் வரு­வது 100 ஆண்­டு­க­­ளுக்கு பிறகு இந்த ஆண்­டுதான். இது இன்றைய குருபெயர்ச்சியின் சிறப்பு அம்சம் ஆகும்.