நாய்கள் விரட்டியதால் கிணற்றில் விழுந்த புள்ளி மான் சாவு

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:36

சாயர்புரம்:

துக்கோட்டை அருகே உள்ள பேரூரணியில் வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த புள்ளி மான் நாய்கள் விரட்டியதால் கிணற்றிற்குள் விழுந்து இறந்தது.

 பேரூரணி ஊருக்குள் நேற்று காலை சுமார் 8 மணியளவில் வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஒரு வயதே நிரம்பிய புள்ளி மான் ஒன்று வந்தது. இந்த மானை பார்த்த அங்குள்ள நாய்கள் அதை துறத்தி சென்றன. உயிருக்கு பயந்து ஓடிய புள்ளி மான் குமாரவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள சுற்று சுவர் இல்லாத 60 அடி கிணற்றிற்குள் விழுந்தது. கிணற்றிற்குள் தண்ணீர் இல்லாததால் படுகாயமடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி அப் பகுதி மக்கள் வன துறையினருக்கு தெரிவித்தனர்

 இதை அடுத்து துாத்துக்குடி சரக அலுவலர் விமல்குமார் மற்றும் வனதுறை அலுவலர்கள் அங்கு வந்தனர். பின்னர் சிப்காட் தீயணைப்பு நிலை அலுவலர் சண்முகம் தலைமையில் வீரர்கள் வந்து மானின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் மானின் உடல் புதுக்கோட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர் ராஜ்குமார் மானின் உடலை  போஸ்ட்மார்டம் செய்தார். பின்னர் மானின் உடல்  வல்லநாடு காப்பு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.