விஷம் குடித்த சினிமா டைரக்டரின் தம்பி 108 ஆம்புலன்ஸ் இயக்க டிரைவர்கள் மறுப்பு

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:35


சங்­க­ரன்­கோ­வில்:

சங்­க­ரன்­கோ­வில் அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் நேற்று விஷம் குடித்த சினிமா டைரக்­டர் தம்­பி­யின் உயிரை காப்­பாற்ற 108 ஆம்­பு­லன்சை இயக்க டிரை­வர்­கள் மறுத்­த­தால் உற­வி­னர்­கள் ஆத்­தி­ர­ம­டைந்­த­னர்.

சங்­க­ரன்­கோ­வில் அருகே உள்­ளது ஆராய்ச்­சி­பட்டி கிரா­மம். இந்த ஊரைச் சேர்ந்­த­ சின்­னத்­துரை மகன் கதி­ர­வன். கோடை மழை படத்­தின் டைரக்­டர். இவ­ரது தம்பி தின­க­ரன்(30). கடந்த 16ம் தேதி குடும்ப பிரச்னை கார­ண­மாக சங்­க­ரன்­கோ­வில் ரயில்வே ஸ்டேஷன் அரு­கே தின­க­ரன் விஷம் குடித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இத­னைத்­தொ­டர்ந்து சங்­க­ரன்­கோ­வில் அரசு ஆஸ்­பத்­தி­ரியில் தின­க­ர­னுக்கு அவ­சர சிகிச்சை பிரி­வில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.

இந்­நி­லை­யில் நேற்று மாலை 4 மணி­க்கு தின­க­ரன் உடல்­நிலை மோச­ம­டைந்­த­தால் பாளை­., ஐகி­ர­வுண்ட் ஆஸ்­பத்­தி­ரிக்கு மேல் சிகிச்­சைக்­காக டாக்­டர்­கள் பரிந்­துரை செய்­த­னர்.   தொடர்ந்து தின­க­ரன் உற­வி­னர்­கள் 108 ஆம்­பு­லன்ஸ் மூலம் தின­க­ரனை பாளை­., கொண்டு செல்ல முயற்சி செய்­த­னர்.

சங்­க­ரன்­கோ­வில் அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் இரண்டு 108 ஆம்­பு­லன்ஸ்­கள் நின்ற போதும், ஆம்­பு­லன்சில் லைட் இல்லை, ஆம்­பு­லன்ஸை இயக்­கும் நிலை­யில் இல்லை என்று டிரை­வர்­கள் ஆம்­பு­லன்சை இயக்க மறுத்து விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இத­னால் உற­வி­னர்­கள் தனி­யார் ஆம்­பு­லன்ஸ் மூலம் பாளை­.க்கு கொண்டு செல்ல முயற்சி செய்­த­னர். ஆனால் தனி­யார் ஆம்­பு­லன்ஸ் எது­வும் கிடைக்­க­வில்லை. இத­னால் உற­வி­னர்­கள் ஆஸ்­பத்­திரி ஊழி­யர்­க­ளு­டன் வாக்­கு­வா­தம் செய்­த­னர். இத­னைத் தொடர்ந்து 5 மணி­நே­ரம் தாம­த­மாக இரவு 9 மணிக்கு 108 ஆம்­பு­லன்ஸ் மூலம் தின­க­ரன் பாளை., ஐகி­ர­வுண்ட் ஆஸ்­பத்­தி­ரிக்கு கொண்டு செல்­லப்­பட்­டார்.

அவ­சர காலத்­தில் பொது­மக்­க­ளின் உயிரை காப்­பாற்­று­வ­தற்­காக மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தில் 108 ஆம்­பு­லன்ஸ்­கள் இயக்­கப்­பட்டு வரு­கி­றது. ஆனால் சங்­க­ரன்­கோ­வி­லில் நேற்று 108 ஆம்­பு­லன்ஸ் பழு­த­டைந்து இருப்­ப­தாக கூறிய டிரை­வர்­கள் 5 மணி­நே­ரம் தாமத்­திற்கு பின்­னர் மீண்­டும் அதே 108 ஆம்­பு­லன்ஸ் மூலம் உயி­ருக்கு போரா­டி­ய­வரை கொண்டு சென்­றது எப்­படி என்­பது தெரி­ய­வில்லை.