உள்­ளாட்­சித்­தேர்­தலை நடத்த தயாரா..... முதல்வர் எடப்­பா­டி­க்கு ஓ.பி.எஸ்., சவால்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:33


திரு­­நெல்­வேலி:

''உள்­ளாட்­சித்­தேர்­தலை நடத்த தயா­ரா' என நெல்­லையில் செயல்­வீ­ரர்கள் கூட்­டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சா­­மிக்கு சவால் விடுத்­துப் பேசி­னார்.

நெல்­லையில் அ.தி.மு.க., (புரட்­சித்­த­லைவி அம்மா) சார்பில் நடந்த செயல் வீரர்கள், வீராங்­க­னைகள் ஆலோ­ச­னைக்­கூட்­டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசி­ய­தா­வ­து:

இயக்­கத்தை மீட்கும் தர்­ம­யுத்­தத்தை துவக்­கியும், எம்.ஜி.ஆர்., நூற்­றாண்டு விழா குறித்தும் இது­வரை 6 மாவட்­டங்­­களில் ஆலோ­சனை நடத்­தி­யுள்­ளோம். 7வது மாவட்­ட­மாக நெல்­லையில் கூட்டம் நடக்­கி­றது. மண்­ட­பம், அரங்கில் செயல் வீரர்கள் கூட்டம் நடப்­பது தான், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். கூட்­டத்தை மாநாடு போல நடத்தும் ஆற்றல், நமக்குத் தான் உண்டு என இங்கு திரண்டு நிற்கும் கூட்டம் நிரூ­பிக்­கி­ற­து.

45 ஆண்­டுக்­காலம் எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா அ.தி.மு.க.,வை மக்கள் இயக்­க­மாக வளர்த்­தனர். அனைத்து தொண்­டர்­களும் நம் பக்கம் தான் என்­ப­தற்கு கடல் போல திரண்டு நிற்கும் இக்­கூட்டம் எடுத்­துக்­காட்­டாக உள்­ளது. நெல்லை இனிமேல்.... அவர்­க­ளு­க்கு (சசி­க­லா) இல்லை.....என நிரூ­பணம் ஆகி­விட்­ட­து. நெல்­லைக்கு பல சிறப்­புகள் உண்டு. நம்­மாழ்வார், கும­­ர­கு­ரு­பரர், பார­தியார், வ.உ.சி., புது­மைப்­பித்தன், புலித்­தேவர், வாஞ்­சி­நாதன், காயி­தே­மில்லத், சுந்­த­ரலிங்க தேவேந்­திரன் உள்­ளிட்டோர் பிறந்த சிறப்­புக்­கு­ரி­யது நெல்லை மண்.

நெல்லை அல்வா உலகம் முழு­வதும் புகழ் பெற்­றது. அல்வா போல இங்குள்ள மக்­களும் இனி­மை­யா­ன­வர்கள். நமக்­கு தலை­யாய கடமை, செய­லாற்றும் பொறுப்­பு உள்­ளது. ஜெய­ல­லிதா தற்­போது நம்­முடன் இல்லை. அண்­ணா, எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா ஆகியோர் திரா­விட இயக்­கத்தை வளர்த்­தெ­டு­த்­த­வர்­கள். இயக்­கத்தின் பரி­ணாம வளர்ச்சியாக விளங்­கு­ப­வர்கள். தமிழ் இனத்தின் தன்­மானம் காத்­தவர் அண்ணா. பெண்­க­ளின் துயர் துடைத்­தவர் எம்.ஜி.ஆர்., இந்த இரு தலை­வர்­களின் குணம், பண்பை ஒருங்கே பெற்­றவர் ஜெய­ல­லி­தா.

1972ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்­கினார். கட்­சியை மக்கள் இயக்­க­மாக உரு­வாக்­கினார். அன்று இயக்கம் துவக்­கப்பட்ட போது, இருந்த அனைத்து தலைவர்­களும் தற்­போது நம்­­முடன் உள்­ளனர். இயக்கத்­திற்கு தூணாக நின்று வலு சேர்த்த பொன்­னையன், பி.எச்.பாண்­டி­யன், மது­சூ­தனன் உள்­ளிட்டோர் நம்­­மிடம் உள்­ளனர். 27 ஆண்­டுகள் தமி­ழ­கத்தை ஆளும் உரி­மை­யை மக்கள் நமக்கு தந்­தனர். நாட்டில் வேறு எந்தக் கட்­சிக்கும் இந்த பெருமை கிடை­யாது. கட்­சிக்கு பக்கபல­மாக நின்ற தலை­வர்­களும் இதற்குக் கார­ணம்.

எம்.ஜி.ஆ­ருக்குப் பின் கட்­சிக்­கு வந்த சோத­னைகள், சவால்­களை உறு­தி­யான உள்­ளத்­து­டன் எதிர்­கொண்டவர் ஜெய­ல­லிதா. எம்.ஜி.ஆர்., காலத்தில் 14 லட்­ச­மாக இருந்த உறுப்­பி­னர்கள் எண்­ணிக்கை, ஜெ., யின் அய­ராத உழைப்பால் 1.5 கோடி­யாக உயர்ந்­தது. கொம்­பாதி கொம்­ப­­­னாலும் உடைக்­க முடியாத கோட்­டை­யாக அ.தி.மு.க., உரு­வெ­டுத்­துள்­ள­து. மக்கள் ஆட்சி நடக்­க வேண்டும்,

எந்த குடும்­பத்­தி­ன் கட்­டுப்­பா­ட்­டிற்கும் கட்சி செல்­லக்­கூ­டா­­து என்­பதற்காக அ.தி.மு.க., துவக்கப்­பட்­டது. ஆனால் இன்று நிலை அப்­படி இல்லை. ஆட்சி யாரிடம் உள்­ளது என மக்­க­ளுக்குத் தெரி­யும். இதற்­கி­டை­யில், ஸ்டாலின் ஆட்சியைப் பிடிக்க துடிக்­கிறார். தனிப்­பட்ட குடும்­பத்திடம் இருந்து ஆட்­சியை மீட்க வேண்­டும்.

2011ல் சசி­க­லா உட்­பட 16 பேரை கட்­சியில் இருந்து ஜெய­ல­லிதா நீக்­கினார். 3 மாதங்­க­ளுக்கு பின் சசி­க­லாவை மட்டும் உத­விக்­காக சேர்த்தார். நீக்­கப்­பட்­ட­வர்­கள் வேறு யாரையும் அவர் சேர்க்­க­வில்லை. தின­கரன் உள்­ளிட்­டோரை அவர் இறக்கும் வரை மீண்டும் கட்­சியில் சேர்க்­க­வில்லை. நீக்­கப்­பட்­ட­வர்கள், அவர்­க­ளா­கவே கட்­சியில் இணைந்து, தாங்­க­ளா­கவே பத­வியை ஏற்றுக் கொண்­டனர். அவர்­க­ளிடம் இருந்து கட்­சியை மீட்கவே தர்­ம­­யு­த்தம் நடக்­கி­ற­து.

ஜெய­ல­லிதா 72 நாட்கள் ஆஸ்­பத்­தி­ரியில் இருந்தார். அவ­ரது இறப்பு குறித்த மர்ம முடிச்சு அவிழும் வரை தர்­ம­யுத்தம் தொடரும். உண்­மை­யான அ.தி.மு.க,, நாம் தான். நியாயம், மக்கள் நம் பக்கம் தான். தற்­போது நடப்­பது, ஜெ,, அரசு அல்ல. ஜெ., ஆட்­சியில் அறி­வித்த திட்­டங்கள் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஜெ., ஆட்­சியில் உலக அளவில் முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்கும் வகையில் கூட்டம் நடத்தி, 96 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. நிறு­வ­னங்கள் தொழில் துவக்க எந்த நட­வ­டிக்­­கையும் இல்லை. 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்­­க­வி­ருந்த மோட்டார் நிறு­வனம், இவர்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட பிரச்­னையால்

ஆந்­தி­ரா­விற்கு சென்று விட்­டது. அம்மா உண­வகங்கள்

சீராக இய­ங்­கு­வ­தில்லை. அங்கு வழங்­கப்­படும் உணவு தர­மா­ன­தாக இல்லை. அம்மா குடிநீர் சீராக கிடைப்­ப­தில்லை. இந்த அரசு பிரச்­னை­களை தீர்ப்­ப­தில்லை. பிரச்­னைகள் தாமாக தீரும் என ஆட்­சி­யா­­ளர்கள் ஜட­மாக நின்று வேடிக்கை பார்க்­கின்­ற­னர். மற்­றொரு புறம்,

ஆட்­சியைப் பிடிக்கும் கன­வில் ஸ்டா­லின் உள்ளார். கட­ந்த தேர்­தலில் ஆட்­சியைப் பிடிக்க அவர் பல வேடங்­களில் வலம் வந்தார். அவற்றை முறி­ய­டித்து ஜெ., ஆட்சி அமைத்­தார்.

122 எம்.எல்.ஏ.,க்­களை மட்டும் வைத்துக் கொண்டு இந்த ஆட்சி நடக்­கி­றது. ஜெ., சேர்த்து வைத்த பெருமை, புகழ், மாண்­பு பறி­போ­கி­றது. இதை தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. உள்­ளாட்­சித்­தேர்­தலை அறி­விக்க சசி­கலா பினாமி எடப்­பா­டி அரசு தயாரா.... பார்­லிமென்ட், சட்­ட­சபை, உள்­ளாட்சி என எந்த தேர்தல் வந்­தாலும் நமது தலை­மையில் ஜெ., ஆட்சி வரும். அந்த நிலை விரைவில் வரும். எம்.ஜி.ஆர்., நூற்­றாண்டு விழா கூட்டம் விரைவில் சென்­னையில் நடக்கும். பிர­தமர் மோடி பங்­­கேற்க உள்ளார். 1972ல் எம்.ஜி.ஆர்., கட்­சியை துவக்­கிய போது, உடன் இருந்­து பணி செய்­த அனை­வ­ருக்கும் பாராட்டு, பரிசு வழங்­கப்­படும். எம்.ஜி.ஆர்., புகழ் சரித்­திரம் இடம் பெறும் வகையில் கருத்­த­ரங்கு, கவி­ய­ரங்கு நடக்கும். மாவ­ட்­டந்­தோறும் எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லி­தா­விற்­கு சிலை அமைக்­கப்­படும். ஜெ., ஆட்­சியை மீண்டும் அமைத்து, நாம் தான் உண்­மை­யான அ.தி.மு.க., என நிரூ­பிப்போம். அனை­வரும் ஒருங்­கி­ணைந்து செயல்­பட்டு வெற்­றி பெறு­வோம்.

இவ்­வாறு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசி­னார்.

மேடையில் ஒலித்த ஜெ., குரல்!

* கூட்­டத்தில் ஓ.பி.எஸ்., பேசத்­ துவங்கும் முன்­பு, அவரைப் பற்றி முன்பு ஜெய­ல­லிதா விழாக்­களில் பேசிய
சில ஆடி­யோப் பதி­வு­களை ஒலி­ப­ரப்­பினர். இதைக் கேட்டு தொண்­டர்கள் ஆர­வா­ரம் செய்­த­னர்.
* ஓ.பி.எஸ்., பி.எச்.பாண்­டியன் பேசத் துவங்கும் முன்பு, வாண வேடிக்கை, பட்­டாசு வெடிக்­கப்­பட்­ட­து.
* மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெ., படங்­க­ளுக்கு மாலை அணிவித்து மரி­யாதை செலுத்­தப்­பட்­ட­து.
* கூட்­டத்தை முன்­னிட்டு நெல்லை ஜங்­ஷ­னில் இருந்து வண்­ணார்­பேட்டை, பாளை., பெல் மைதானம் வரை எம்.ஜி.ஆர்., ஜெ., ஓ.பி.எஸ்., படங்­களுடன் பிளக்ஸ் போர்­டுகள், அலங்­கார விளக்­­கு­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­த­ன.
* ஓ.பி.எஸ்., பேசிய போது மேடையில் இருந்த தலை­வர்கள், முக்­கிய நிர்­வா­கிகள் அனைவரின் பெய­ரையும் குறிப்­பிட்டுப் பேசி­னார். தலை­வர்கள் பெய­ரை குறிப்­பிட்ட போது, தொண்­டர்கள் ஆர­வாரம் செய்­த­னர்.
* கூட்­டத்­திற்கு வந்த வாக­னங்­க­ளுக்கு தனித்­த­னி­யாக இடம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. மைதானம் முன்பு ஏரா­ள­மான போலீசார் பாது­காப்­புப்­ப­ணிக்கு குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.