ரோட்டில் ஆயில் கொட்­டி­ய­து பைக்குக­ளில் சென்­ற­வர்கள் காயம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:29

திரு­­நெல்­வேலி:

பாளை., அரு­கே ரோட்டில் ஆயில் கொட்­­­டிக் கிடந்த­தால் பைக்­கு­க­ளில் சென்­ற­வர்கள் கீழே விழு­ந்து காய­ம­டைந்­த­னர்.

பாளை., அருகே சீனி­வாச நகர் விலக்கு ரோட்டில் நேற்று ஆயில் கொட்டிக் கிடந்­தது. ரோட்டில் சென்ற ஒரு டேங்கர் லாரியில் இருந்­து ஆயில் கீழே கொட்­டி­யுள்­ள­து. டேங்கர் லாரியில் சென்­ற­வர்கள் அதை கண்டு கொள்­ளாமல் சென்று விட்­டனர். ரோட்டில் பைக்­கு­களில் சென்­ற­ சிலர் கீழே விழுந்து காய­ம­டைந்­தனர். காய­ம­டைந்­த­வர்கள் ஆஸ்­பத்­தி­ரியில் சிகிச்­­சை பெற்­றனர்.

இது­கு­றித்து போலீசார் பாளை., தீய­ணைப்பு நிலை­யத்­திற்கு தகவல் அளித்­தனர். பணி­யா­ளர்கள் அங்கு சென்று சுமார் அரை கி.மீ., தூரம் ஆங்­காங்கே கொட்டிக்­கி­டந்த ஆயிலை மண் போட்டு தண்ணீர் பீய்ச்சி அகற்­றினர். பின்னர் ரோட்டில் போக்­கு­வ­ரத்­து சீரா­னது.