நெல்­லையில் வெவ்­வேறு இடங்­களில் இரு­வர் மாயம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:28

திரு­நெல்­­வேலி:

நெல்­லையில் வெவ்­வேறு இடங்­களில் மாய­மான இரு­­வரை போலீசார் தேடி வரு­­கின்­ற­னர்.

பாளை., லட்­சுமி நர­சிங்­க­பு­ரத்தைச் சேர்ந்த அன்­ப­ரசன் மகள் மோனிகா(19). இவர் பிளஸ் 2 படித்­துள்ளார். இவ­ர் கடந்த 14ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு வரு­வ­தா­கக் கூறி வீட்டில் இருந்து புறப்­பட்­டுச் சென்றார். பின்னர் அவர் திரும்பி வர­வில்லை. குடும்­பத்­தினர் அவரை பல்­வேறு இடங்­களில் தேடினர். எந்த தக­வ­லும் கிடைக்­க­வில்­லை.

இது­­கு­றித்து மோனி­கா­வின் தாய் விஜ­ய­லட்­சுமி பாளை., போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்­பெக்டர் பெரிய­சாமி வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார்.

* ஆலங்­கு­ளம், நல்லூர், வி.வி.புரம், பிள்­ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சேதுராமன் மகன் ராஜா(45). இவர் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர். நெல்லை டவுன் ஆஸ்­பத்­தி­ரியில் ராஜாவின் தாய் சிகிச்­சைக்கு சேர்க்­கப்­பட்­டுள்ளார். ஆஸ்­பத்­தி­ரியில் அண்ணன் ரவிச்­சந்­தி­ர­னுடன் ராஜா இருந்தார். கடந்த 15ம் தேதி ஆஸ்­பத்­தி­ரியில் இருந்து ராஜா வெளி­யே சென்றார். பின்னர் அவர் திரும்பி வர­வில்லை. அவர் எங்கு சென்றார் என தெரி­ய­வில்­லை.

இதுகுறித்து ரவிச்­சந்­திரன் நெல்­லை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.