வள்ளியூர் அருகே மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதி துாத்துக்குடி வாலிபர் பலி

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:27


வள்ளியூர்:

வள்ளியூர் அருகே மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் வாலிபர் பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்தார்.

துாத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஜேசு அடிமை மகன் அந்தோணிராஜ் (28). அதே ஊரைச் சார்ந்த அன்ஸ்டன் (20). இருவரும் அந்தோணிராஜின் மகளின்  ஞானஸ்நான விழாவிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர் . வழியில் வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடி மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புச் சுவர் மீது பைக் மோதியது.  பைக்கை ஓட்டி வந்த அந்தோணிராஜ்  சம்பவ இடத்திலே உயிரிழந்தார், அன்ஸ்டன் படுகாயங்களுடன் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்