லாரி மோதி சரிந்தது அலங்கார வளைவு :போக்குவரத்து பாதிப்பு

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 08:45


மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் அருகே குழித்துறையில் ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் வாகனம் மோதியதில் அலங்கார வளைவு கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

      மார்த்தாண்டம் அருகே குழித்துறை போஸ்ட் ஆபீஸ் ஜங்ஷன் அருகில் சாமூண்டேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழா அடுத்த வாரம் துவங்குகிறது. இதற்காக குழித்துறை போஸ்ட் ஆபீஸ் ஜங்ஷனில் ரோட்டின் குறுக்கே அலங்கார வளைவு அமைக்கபட்டிருந்தது. களியக்காவிளை அருகே மங்காடு பகுதியில் நடக்கும் ரோடு பணிகளுக்காக குழித்துறை தாமிரப்பரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக டேங்கர் லாரி ஒன்று அப்பகுதி வழியாக வந்தது. டேங்கர் லாரியை பெரியகுளம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டிவந்தார். எதிர்பாராதவிதமாக அந்த டேங்கர் லாரி அலங்கார வளைவின் மீது மோதியது. இதில் அலங்கார வளைவு டேங்கர் லாரி மீதும் அவ்வழியாக வந்த கார் மீதும் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வேறு எந்த சேதங்களும் ஏற்படவில்லை. அலங்கார வளைவு விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.