துாத்துக்குடி:
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து 65 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதித்திருந்து.இந்நிலையில் நாளையுடன் தடைக்காலம் முடிவுக்கு வருவதால் மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள கிழக்கு கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த சில ஆண்டகள் வரை 45 நாட்கள் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தாண்ட 65 நாட்கள் மீன் பிடிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 417 விசைப்படகுகள் உள்ளன. இவை துாத்துக்குடி மீன் பிடி துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்கின்றன.
மீன் பிடி தடை அமலுக்கு வந்தவுடன் படகுகள் பராமரிப்பு,வலைகள் சீரமைப்பு பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். குறைந்த பட்சம் 20 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை செலவில் சீரமைப்பு செய்தனர்.
துாத்துக்குடிமாவட்டத்தில் வேம்பார், தருவைகுளம், வேம்பார் பகுதியில் இருந்து தினமும் சூறை, பாறை, வாழை,விளை, தாழை, கணவாய், ஷீலா உட்பட பல்வேறு வகை மீன்கள் பிடிக்கப்படும். தினசரி 130 முதல் 140 டன் வரை மீன்கள் கடலில் இருந்து பிடிக்கப்படுகின்றன.
இவை கேரள மாநிலம், கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தினசரி 1.40 கோடி முதல் 1.60 கோடி ரூபாய் வரை மீன்களால் கிடைக்கும் வருமானம் 65 நாட்கள் பாதிக்கப்பட்டு இருந்தது.
தடைக்காலம் நாளை14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 15ம் தேதி அதிகாலை 5 மணிமுதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்காக தயார் நிலையில் உள்ளன.இதனால் அடுத்தவாரம் முதல் மீன்விலை குறையும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படகுகள் வௌ்ளோட்டம்:
பராமரிக்கப்பட்ட படகுகள் நேற்று கடலில் வௌ்ளோட்டம்விட்டு மீனவர்கள் சோதனை செய்தனர். இன்ஜின்கள் நல்ல முறையில் இயங்குகிறதா என்று சோதித்துபார்த்தனர்.
இன்ஸ்சூரன்ஸ் அதிகாரிகள் ஆய்வு;
கடலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு கண்டிப்பாக இன்ஸ்சூரன்ஸ் செய்யவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருப்பதைதொடர்ந்து நேற்று மதுரையச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் தலைமை அதிகாரி பொன்னுச்சாமி, சீனியர் கிளை மேலாளர்கள் மணிகண்டன், கிளைட்டன்,வளர்ச்சி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் படகுகளில் ஆய்வு செய்தனர்.
இன்ஸ்செட்பாக்ஸ்
மீன்பிடி தடைக்காலம் மாறுமா..
மீன் பிடி தடைக்காலத்தை வடகிழக்கு பருவமழை காலங்களில் மாற்றி அமைக்கும்படி மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
பருவமழை காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். கடலில் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த காலங்களில் மீன் பிடி தடைக்காலமாக அறிவித்தால், மீனவர்களுக்கு வசதியாக இருக்கும். மேற்கு கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் தடைக்காலங்களில் கிழக்கு கடல் பகுதியில் புகுந்து மீன் பிடித்து செல்கின்றனர் என, மீனவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.