ரஜி­னி­யு­டன் இணைந்து புதிய அணி என்­பது வதந்தி : வைகோ

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2017 08:48

துாத்­துக்­குடி,:

தமி­ழக அர­சில் தற்­போது தெளி­வற்ற நிலை காணப்­ப­டு­கி­றது. இத­னால் சட்­ட­ச­பைக்கு உட­னடி தேர்­தல் வருமா என்­பதை யூகித்து சொல்ல முடி­யாது. ரஜி­னி­யும், நானும் இணைந்து தேர்­தலை சந்­திக்க போவ­தாக வரும் செய்­தி­கள் எல்­லாம் வதந்தி தான் என்று துாத்­துக்­கு­டி­யில் வைகோ குஷி­யாக தெரி­வித்­தார்.

துாத்­துக்­குடியில் வைகோ நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது;

போயஸ் தோட்­டத்­தில் ஏற்­பட்ட பிரச்­னையை ஒட்டி செய்தி சேக­ரிக்க சென்ற ஊடக அச்­சுத்­து­றை­யி­னர் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­திற்கு மதி­முக சார்­பில் கண்­ட­னம் தெரி­விக்­கி­றேன். பத்­தி­ரிகை­யா­ளர்­கள் செய்தி சேக­ரிக்க எல்லா இடங்­க­ளுக்­கும் செல்­வார்­கள். ஆனால் அவர்­களை தாக்­கு­வது என்­பது கண்­டிக்­கக் கூடி­யது. உட­ன­டி­யாக போலீ­சார் நட­வ­டிக்கை எடுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்ய வேண்­டும்.

 தமி­ழ­கத்­தில் நடக்­கும் ஆட்­சி­யில் தெளி­வற்ற நிலை­யில் இருக்­கி­றது.  இதனை எல்­லோ­ரும் கூறி வரு­கின்­ற­னர்.  ஆனால் இதனை வைத்து கொண்டு தமி­ழக சட்­ட­ச­பைக்கு உட­னடி தேர்­தல்  வருமா என்­பதை யூகித்து சொல்ல முடி­யாது. ஜனா­தி­பதி தேர்­த­லில் எங்­கள் கட்­சிக்கு ஓட்டு இல்லை. இத­னால் அது பற்றி பேச வேண்­டி­ய­தில்லை. ரஜி­னி­யு­டன் இணைந்து நான் அர­சி­யல் செய்ய உள்­ள­தாக வரும் தக­வல் என்­பது வெறும் வதந்தி தான். இந்த வதந்தி தான் தற்­போது உலா வந்து கொண்­டிக்­கி­றது. இவ்­வாறு  வைகோ தெரி­வித்­தார்.