ரூ. 1 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது, சென்னைஸ் அமிர்தா

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2017 03:56

இந்தியாவில், ஹோட்டல் நிர்வாக இயல் கல்வி அளிப்பதில் முன்னிலை வகித்து வரும் சென்னைஸ் அமிர்தாஇன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ரூ. 1 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித் தொகைகளை வழங்கவுள்ளது. 100 சதவீத கல்வி உதவித் தொகைகளும் இதில் அடங்கும். கல்வி உதவித் தொகை மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் இன்றி அவர்களது வருகை பதிவு, நடத்தை, முதல் தலைமுறை  பட்டதாரி அந்தஸ்து,பொருளாதார நிலை, திறமை, போன்றவற்றின் அடிப்படையிலும் வழங்கப்படவுள்ளன.

 சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. ஆர். பூமிநாதன் இது குறித்துகூறுகையில், “எங்களது கல்வி நிறுவனத்தின் பயிற்சி, நடைமுறைக்கும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் செயல் முறை அடிப்படையிலானது. இது, எங்களது கல்வி நிலையத்தின் தனித்தன்மை ஆகும். இதனால் எங்களது தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதுடன், இங்கு பயில்பவர்களுக்கு எளிதில் வேலையும் கிடைக்கிறது. கல்வி மட்டுமல்லாது மாணவர்களின் திறமை மற்றும் ஏனைய நல்ல அம்சங்களையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்த அடிப்படையில் தான் எங்கள் ஸ்காலர்ஷிப் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது,”என்றார்.

 இந்தியா முழுவதிலும் உள்ள சுமார்450 ஹோட்டல்களில் சென்னைஸ் அமிர்தா நிறுவனம் தங்கள் மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை பெற்று தருகிறது. மேலும் மலேஷியா, மொரிஷியஸ், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி அளிப்பதில் முன்னிலை வகிக்கிறது.