இன்ஜஸ்டிஸ் 2 ப்ளே ஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ் பாக்ஸ் 1 விளையாட்டு அறிமுகம்

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2017 03:55

உலகப் புகழ் பெற்ற நெதர்ரியல்ம் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டு வார்ன் பிரதர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘இன்ஜஸ்டிஸ் 2’ என்ற திரைப்பட காவியக் கதை ப்ளே ஸ்டேஷன் 4 –இலும் , எக்ஸ் பாக்ஸ் 1-இலும் விளையாடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2013 இல் வெளி வந்த இன்ஜஸ்டிஸ் – காட்ஸ் அமங் அஸ்  கதையினைத் தொடர்ந்து தற்போது இன்ஜஸ்டிஸ் 2 வெளி வந்துள்ளது.

கதையில் உள்ளவாறு சூப்பர்மேன் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் பேட்மேனும் அவருடைய தோழர்களும் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை அப்படியே உள்ளதை உள்ளவாறு படம் பிடித்து காண்போரின் பரவசத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இந்தியாவில் சில்லறை விற்பனையாளர்களிடம் இந்த கணினி விளையாட்டு ஸ்டாண்ட்ர்ட் பதிப்பு ரூ. 3499/- விலையிலும் டீலக்ஸ் பதிப்பு ரூ. 4,499/- என்ற விலையிலும், அல்டிமேட் பதிப்பு ரூ. 6999/- என்ற விலையிலும் கிடைக்கின்றன. வாங்க விரும்புவோர் உடனே www.gamestheshop.com என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.