எமிரேட்ஸ் விமான பயணிகளுக்கு சொகுசு ஒய்வு அறை

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2017 03:05


எமிரேட்ஸ் நிறுவனம், துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள தமது சொகுசு ஒய்வு அறைகளில் பயணிகள் தங்குவதற்கான வசதியை மேலும் அதிகரித்து அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியை இந்நிறுவனத்தின் லாயல்டி திட்ட உறுப்பினர்கள்  மற்றும் அவர்களது விருந்தினர்கள் குறைந்தபட்ச கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து வகுப்பில் பயணிப்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் எமிரேட்ஸ் ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது விருந்தினர்கள் பே-பெர்-விசிட் எனப்படும் வருகை ஒன்றிற்கான கட்டண முறையை பயன்படுத்தி கொள்ளலாம். வர்த்தக வகுப்பில் பயணிப்பவர்கள் முதல் வகுப்பு ஒய்வுஅறையில் தங்க விரும்பினால், கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு, துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில், ஏ, பி மற்றும் சி  ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஏழு ஓய்வுஅ றைகள் உள்ளன. இவற்றில் முதல் வகுப்பு மற்றும் வர்த்தக வகுப்பினருக்காக தனிஅறைகள் உள்ளன.  தகுதி உள்ள விருந்தினர்கள் துபாயில் எமிரேட்ஸ்வர்த்தக வகுப்பு ஓய்வு அறைக்கு 100 அமெரிக்க டாலரும் மற்றும் எமிரேட்ஸ் முதல் வகுப்பு ஓய்வு அறைக்கு 200 அமெரிக்க டாலரும் செலுத்தி தங்கி கொள்ளலாம். வர்த்தக வகுப்பு பயணிகள் கூடுதல் கட்டணமாக 100 அமெரிக்க டாலர் செலுத்தி முதல் வகுப்பு ஓய்வு அறையைஉபயோகித்து கொள்ளலாம். நுழைவுகட்டணம் செலுத்திய விருந்தினர்கள், ஓய்வு அறைகளில் நான்குமணி நேரம் வரை தங்கலாம். தற்போது, முதல், வர்த்தக வகுப்பு பயணிகள் மற்றும் சில்வர் , கோல்டு  மற்றும் பிளாட்டினம்  பிரிவு ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்கள் துபாயில் உள்ள ஓய்வு அறைகளை கூடுதல் சலுகையாக பயன்படுத்தும் வசதி உள்ளது.