சென்னையில் `சரி கம பா லி’ல் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு!

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2016 01:29

சென்னையில் `சரி கம பா லி’ல் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு!

எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 13 அன்று நடைபெறுகிறது!

உங்கள் குழந்தை அருமையான குரல் வளம் கொண்ட பாடகர் என்பது உங்களுக்கு தெரியும், ஆனால் உலகிற்கு தெரியுமா? ஜீ தமிழ் தொலைக்காட்சி உங்கள் குழந்தையின் திறமையை உலகறியச் செய்யும் வாய்ப்பை வழங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 5 முதல் 14 வயது வரையுள்ள இனிமையான குரல் வளம் மிக்க திறமைசாலிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி அடையாளப்படுத்தவுள்ளது. இதற்காக, முன்பு கண்டிராத வகையில் பிரம்மாண்ட அரங்கு மற்றும் திறமையான பாடகர்களுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சி களம் இறங்கவுள்ளது.

 `சரி கம பா லி’ல் சாம்ப்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு சென்னையில் வரும் நவம்பர் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சேத்துப்பட்டு, எண்: 78, ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி அரங்கில் தொடங்கவுள்ளது. உங்கள் குழந்தையின் திறமைக்கு வழிகாட்டியாக அமையவுள்ள இந்நிகழ்ச்சிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி அன்புடன் அழைக்கிறது.