ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரம் மாற்றி அமைப்பு

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2016 01:46

தமிழ் தொலைக்காட்சி நேயர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சி, புத்தம் புதிய கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்பட ஒளிபரப்பு மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. நேயர்களின் வசதிக்கேற்ப ஜீ தமிழ் தொலைக்காட்சி, நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் நேயர்களுக்கேற்ற கால நேரத்தில், கூடுதல் கால அளவுடன் ஒளிபரப்பாக உள்ளன. குழந்தைகளின் நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி, அவர்களின் திறமைகைளை பறைசாற்றும் “ஜுனியர் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சி நவம்பர் ஒன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. நடனத்தில் ஈடுபாடுடைய தமிழகத் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுடன் பிரபலங்களை நடனமாடச் செய்து, அவர்களின் வாழ்வியல் கனவுகளை நனவாக்கும் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியும் நேயர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. திரையுலக பிரபலங்களான சினேகா, கௌதமி, சுதா சந்திரன் நடுவர்களாக பங்கேற்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இரவு 8.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகிறது.

நடிகை ரோஜா கலகலப்பாக தொகுத்து வழங்கும் “ஜீன்ஸ்” நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 10 மணிக்கும், ஆச்சரியப்பட வைக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளை, பிரபல நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்கும், நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சி ஞாயிறு இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.  நேர மாற்றத்திற்கேற்ற கலகலப்பான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுத்து ஒளிபரப்பி வரும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணத் தவறாதீர்கள்.