சரக்­கு­பெட்­ட­கம் யைாளு­வ­தில் துாத்­துக்­குடி வஉசி துறை­மு­கம் சாதனை

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:24


துாத்­துக்­குடி:

துாத்­துக்­குடி வஉசி துறை­மு­கம் சரக்கு பெட்­ட­கம் யைாளு­வ­தில் புதிய சாதனை படைத்­துள்­ளது.

தென்­னிந்­தி­யா­வின் பொரு­ளா­தார இயந்­தி­ர­மாக செயல்­பட்டு வரும் துாத்­துக்­குடி வ.உ. சிதம்­ப­ர­னார் துறை­மு­கம்   கடந்த நிதி­யாண்­டில் கையாண்ட அள­வான 6,42,103   சரக்­கு­பெட்­ட­கங்­க­ளை­விட 11–3–2018 வரை 6,52,168   சரக்­கு­பெட்­ட­கங்­களை   அதி­க­மாக கையாண்டு புதிய சாதனை படைத்­துள்­ளது. இச்­சா­த­னை­யா­னது இந்த நிதி­யாண்­டில் 24 நாட்­க­ளுக்கு முன்­ப­தா­கவே நிகழ்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

 வ.உ.சிதம்­ப­ர­ன­ரர் துறை­முக பொறுப்­புக் கழ­கத் தலை­வர் ஜெய­கு­மார்,  இந்த சாத­னையை படைக்க கார­ண­மாக இருந்த அனைத்து துறை­முக உப­யோ­கிப்­பா­ளர்­கள், கப்­பல் முக­வர்­கள், அனைத்து அதி­கா­ரி­கள், ஊழி­யர்­கள் மற்­றும்   தொழி­லா­ளர்­கள் அனை­வ­ரை­யும் பாராட்­டி­னர்.