கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மூங்கில் மரக்கன்றுகள் நடும் பணி

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:17


திருநெல்வேலி:

கொக்கிரகுளம் தாமிபரணி ஆற்றங்கரையோரத்தில் பாரதிய சேவா கேந்திரத்தினர் மரக்கன்றுகளைநடப்பட்டன.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கரையோர ஆக்ரமிப்புகளை அகற்றும் பணிகள் 3வது கட்டமாக சில நாட்களுக்கு முன் நடந்தது. நெல்லை கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை போன்ற பகுதிகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை கரையோரப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு ‘பளிச்’ சென காணப்படுகிறது. அந்த இடத்தில் பாரதிய சேவா கேந்திரம் சார்பில் மூங்கில் மரக்கன்று வைக்கும் பணிகள் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் பாரதிய சேவா கேந்திரம்  அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.