தாமிரபரணிகரையை சுத்தப்படுத்த தொல்காப்பியர் தெரு மக்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:10


திருநெல்வேலி,:

கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெரு தாமிரபரணி கரையை சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக் கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் வலியுறுத் தியுள்ளனர்.

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணியில் 3 கட்டமாக மேற்கொண் டனர். 

 மேற்கண்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது. அதுபோல் தாமிரபரணியில் மாநகர பகுதி களில் உள்ள கழிவு நீர் கலப்பதை தடுக்க பாதாள சாக் கடை திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெரு தாமிபரணி ஆற்றங்கரையில் முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதோடு, ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு  பரிதாபமாக காட்சியளிக்கிறது. கரையில் திறந்த வெளியில் கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. கரையோரத்தில் பன்றிகள் உலாவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 4வது கட்டமாக தாமிபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளும் போது தொல் காப்பியர் தெரு தாமிரபரணி கரையை சுத்தப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இது குறித்து கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெரு பால்ராஜ் கூறுகையில், ‘ மாவட்டம் நிர்வாகம் சார்பில் 3 முறை தாமிரபரணி ஆற்றங்கரையில் மெகா துப்புரவு பணி நடந்துள்ளது.  கலெக்டர் அலுவலகத்தில் சற்று தொலைவில் அமைந்துள்ள தொல்காப்பியர் தெரு தாமிரபரணி கரையில் துப்புரவு பணி மேற்கொள்ளப் படவில்லை. இரவு நேரங்களில் சமூக விரோத செயல் கள் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்க்க தொல் காப்பியர் தெரு ஆற்றங்கரையில் துாய்மை பணியை மேற்கொண்டால், இப்பகுதி மக்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தயாராகவுள்ளனர் ’ என்றார்.

 பேச்சியம்மாள் கூறுகையில், ‘ தொல்காப்பியர் தெரு தாமிரபரணி கரையை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இதனால் முட்புதர், செடி, கொடிகள் வளர்த்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மெகா துாய்மை பணி மேற்கொள்ளவதோடு, கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துாய்மை பணிக்கு பின்னர் தாமிரபரணி கரையில்  குழந்தைகள் விளையாட வசதியாக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.