பாளை., யில் 'காதல்' மனை­வியை கத்­தியால் குத்தி கொலை செய்து கணவர் தற்­கொ­லை

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 01:36


திரு­நெல்­வேலி:

பாளை., யில் கடன் பிரச்­னையால் பிரிந்து சென்ற 'காதல்'  மனை­வி­­யை கத்­தியால் குத்திக் கொலை செய்து விட்டு தொழி­லாளி விஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டார்.

பாளை., சம்­பக்­கடைத் தெருவைச் சேர்ந்த சங்­க­ரன் மகன் மோகன்(48). இவர் மீன்­ கடை­யில் வேலை செய்து வந்தார். இவ­ரது மனைவி அந்தோ­ணி­யம்மாள்(36).இரு­வரும் காத­லித்து திரு­மணம் செய்­த­வர்கள். இவர்­க­ளுக்கு கோபி(11), சங்­கரன்(7) ஆகிய மகன்கள், நந்­தினி(10) என்ற மகள் உள்­ளனர். பாளை., பள்­ளியில் கோபி ஆறாம் வகுப்பு, நந்­­தினி ஐந்தாம் வகுப்பு, சங்­கரன் 3ம் வகுப்பு படித்து வரு­­கின்­­ற­னர்.

மோக­னுக்கு வேலையில் போதிய வரு­மானம் கிடைக்­க­வில்லை. அவர் பல­ரிடம் கடன் வாங்­கி­யுள்ளார். அந்­தோ­ணி­யம்மாள் மகளிர் சுய உத­விக்­குழுவில் கடன் வாங்­கி­யி­ருந்தார். அந்த வகையில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் அந்­தோ­ணி­யம்­மா­­ளுக்கு கடன் இருந்­­துள்­ள­து. அந்­தோ­ணி­யம்மாள் வீடுகளில் வேலை செய்து மாதம் 10 ஆயிரம் ரூபாய்­ சம்­பா­தித்து வந்தார். எனினும், கடன் பிரச்னை தீராமல் இருந்­தது. கடன் அளித்­த­வர்கள் வீட்­டுக்­கு அடிக்­கடி வந்து கேட்­டதால் கணவன், மனை­விக்கு இடையே பிரச்னை ஏற்­பட்­டது.

கடன் தீர்ந்த பிறகு சேர்ந்து வாழ்வோம் எனக்­கூறி அந்தோ­ணி­யம்மாள் சில நாட்­க­ளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளி­யே­றினார். சமா­தா­ன­பு­ரத்தில் தனது அக்கா ரஞ்­சிதம் வசித்த வீட்டின் அருகே அவர் வாட­­கைக்கு வீடு எடுத்து மகள் நந்­தி­னியுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் தந்­தை­யுடன் இருந்­த­னர். தனி­யாக வசித்து வந்த அந்­­தோ­ணி­யம்­மாளை மோகன் அடிக்­கடி சந்­தித்து வீட்­டுக்கு வரும்­படி அழைத்து வந்தார். அதற்கு அந்­தோ­ணி­யம்மாள் மறுப்பு தெரி­வித்தார். நேற்­று­முன்­தினம் மோகன் சமா­தா­ன­­பு­ரத்­திற்­குச் சென்று வீட்­டுக்கு வரும்­படி அந்தோ­ணி­யம்­மாளை கூப்­பிட்டார். வழக்கம் போல, அந்­தோ­ணி­யம்மாள் மறுத்து விட்­டார்.

கத்­திக்­குத்­து

நேற்று மதியம் மோகன் சமா­தா­ன­பு­ரத்தில் வீட்டில் இருந்த அந்­தோ­ணி­யம்­மாளை சந்­தித்துப் பேசினார். அப்­போது இரு­வ­ருக்கும் தக­ராறு ஏற்­பட்­டது. ஆத்­தி­ர­ம­டைந்த மோகன் கத்­தியால் அந்­தோ­ணி­யம்­மா­ளை குத்­தி­னார். அவ­ரது அலறல் சத்தம் கேட்டு பக்­கத்து வீட்­­டினர் ஓடி வந்­தனர். உடனே மோகன் அங்­கி­ருந்து சென்று விட்டார். ரத்த வெள்­ளத்தில் உயி­ருக்குப் போரா­டிய அந்­தோ­ணி­யம்­மாளை அக்­கம்­பக்­கத்­தினர் பாளை., ஐகி­ரவுண்ட் ஆஸ்பத்­தி­ரிக்குக் கொண்­டு சென்­றனர். ஆஸ்­பத்­தி­ரிக்குச் செல்லும் வழியில் அவர் இறந்­தார்.

விஷம் குடித்துதற்­கொ­லை

மனை­வியை கத்­தியால் குத்­திய மோகன் மன­மு­டைந்த நிலையில் இருந்தார். அவர் தற்­கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தார். பள்­ளிக்­குச் சென்ற மகன் சங்­க­ரனை மாலையில் வீட்­டுக்கு அழைத்துச் செல்லும் போது பாளை., மார்க்கெட் பகு­தியில் அவர் மயங்கி விழுந்தார். த.ம.ஜ.க.,வைச் சேர்ந்த ஜமால்­, சாந்தி ஜாபர், ஷேக், தாமஸ் உள்­ளிட்டோர் மோகனை ஆம்­பு­லன்சில் பாளை., ஐகி­ரவுண்ட் ஆஸ்­பத்­தி­ரிக்கு கொண்­டு சென்­றனர். ஆஸ்­பத்­தி­ரிக்குச் செல்லும் வழியில் மோகன் இறந்­தார்.

இது­கு­றித்து பாளை., உதவி கமி­ஷனர் விஜ­ய­குமார், இன்ஸ்­­பெக்­டர்கள் பெரி­ய­சாமி, பாபுனி விசா­ரணை நடத்­தினர். அந்­தோ­ணி­யம்மாள் உற­வி­னர்­க­ளிடம் போலீசார் விசா­ரணை நடத்­தினர். இரு­வ­ரின் உடல்­களும் போஸ்­ட்­மார்ட்­டத்­திற்கு ஐகி­ரவுண்ட் ஆஸ்பத்­தி­ரிக்கு அனுப்­பப்­பட்­டன. இச்­சம்­பவம் நேற்று பாளை., யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­ய­து. தாய், தந்­தையை இழந்து பரி­த­வித்த 3 குழந்­தை­களின் நிலை­யை எண்ணி உற­வி­னர்கள் கண்ணீர் வடி­த்­த­னர்.

ஆம்­புலன்ஸ் வர­வில்­லை

* சம்­பவம் குறித்து அந்­தோ­ணி­யம்­மாளின் பக்­கத்து வீட்­டுக்­கா­ரர்கள் கூறிய போது, ''அந்­தோ­ணி­யம்மாள் உடலில் காயங்­க­ளுடன் உயி­ருக்குப் போரா­டியதைக் கண்டு ஆம்­பு­லன்­சுக்கு போன் செய்தோம். ஒரு மணி நேரம் வரை

ஆம்­புலன்ஸ் வர­வில்லை. ஆம்­புலன்ஸ் வந்­ததும் அவரை ஏற்றி ஆஸ்­பத்­தி­ரிக்­கு கொண்டு வந்­­தோம். ஆஸ்­பத்­தி­­ரிக்கு வந்தும் பயன் இல்லை என்ற நிலை ஏற்­பட்டு விட்­டது" என்­ற­னர்.

* ஆத்­தி­­ரத்தில் மனை­வியை கத்­தியால் குத்திக் கொலை செய்து விட்டு விஷம் குடித்த நிலை­யிலும் மோக­னுக்கு மகன் சங்­கரன் குறித்து கவலை ஏற்­பட்­டுள்­ளது. பள்ளி சென்ற மகன் தவிக்­கக்­கூ­டாது என்ற நினைப்பில் மகன் படித்து வந்த பள்­ளிக்குச் சென்று அவனை அழைத்து வந்­துள்ளார். நடு­வ­ழியில் ரோட்டில் சுருண்டு விழுந்து ஆஸ்­பத்­தி­ரிக்குச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்­துள்­ள­து