பம்ப்­செட் சுவர் இடிந்து கிணற்­றில் விழுந்­த­தில் வாலி­பர் பலி

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2018 02:20சாயர்­பு­ரம்,:

புதுக்­கோட்டை அருகே உள்ள கூட்­டாம்­பு­ளி­யில் மோட்­டார் பம்ப் செட் சுவர் இடிந்­த­தில் கிணற்­றிற்­குள் விழுந்த வாலி­பர் பரி­தா­ப­மாக பலி­யா­னார்.

துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே கூட்­டாம்­புளி கிழக்கு தெரு­வைச் சோ்ந்தவர் கண்­ணன் என்ற ஜெய­பா­லன். இவ­ரது மகன் கௌதம் (18). இவர் ஐடிஐ படித்து முடித்­து­விட்டு கூலி வேலை செய்து வந்­தார். நேற்று காலை கௌதம், அவ­ரது தம்பி சங்­க­ர­லிங்­கம் (15), சித்தி மகன் வன­ராஜ் (16) ஆகி­யோர்   கிழக்கு சாமி கோயில் அருகே உள்ள ஒரு தனி­யார் தோட்­டத்­தில் தர்­பூ­சணி விதை விதைக்­கும் வேலைக்கு சென்­றுள்­ள­னர். வேலையை முடித்து விட்டு மதி­யம் அங்­குள்ள கிணற்­றில் உள்ள பம்ப் செட் மோட்­டா­ரில் கைகால் கழுவி கொண்­டி­ருந்­த­னர். அப்­போது எதிர்­பா­ர­த­வி­த­மாக மோட்­டார் பொருத்­தப்­பட்­டி­ருந்த சுவர் இடிந்து கிணற்­றுக்­குள் விழுந்­தது.

அப்­போது அதன் அருகே நின்று கை, கால் கழு­விக் கொண்­டி­ருந்த கௌதம் மீது   சுவர் விழுந்து அமுக்­கி­ய­தால் அவ­ரும் சேர்ந்து கிணற்­றிற்­குள் விழுந்தார். இதை பார்த்த அவ­ரது சகோ­த­ரர்­கள் வன­ராஜ், மற்­றும் சங்­க­ர­லிங்­கம் கௌதமை மேலே துாக்க முயற்சி செய்­துள்­ள­னர். அப்­போது  திடீ­ரென மோட்­டார் ரூம்  முழு­மை­யாக இடிந்து கிணற்­றிற்­குள் விழுந்­தது. இத­னால் அதிர்ச்சி அடைந்த அவ­ரது சகோ­த­ரர்­கள் ஊருக்­குள் ஓடிச்­சென்று உத­விக்கு ஆட்­களை அழைத்து வந்­த­னர். அதற்­குள்  சுவ­ரு­டன் கிணற்­றின் அடி­யில் சிக்­கிக் கொண்ட கௌதம் மூச்சு திணறி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். சுவ­ருக்கு அடி­யில் கிணற்­றுக்­குள் சிக்கி கொண்ட கௌதமை மீட்க முடி­யா­த­தால் அங்­கி­ருந்­த­வர்­கள் சிப் காட் தீய­ணைப்பு நிலை­யத்­திற்கு தக­வல் தெரி­வித்­த­னர். அவர்­கள் விரைந்து வந்து கௌதம் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்­த­னர்.

இது­கு­றித்து போலீசார் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.