பெரிய கப்­பல்­கள் வரு­வ­தற்­காக துாத்­துக்­குடி துறை­மு­கத்தை 16 மீட்­டர் ஆழப்­ப­டுத்­தும் பணி

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:15


துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­து­றை­மு­கத்­திற்கு பெரிய கப்­பல்­கள் வந்து செல்­வ­தற்­காக துறை­மு­கத்தை 16 மீட்­டர் ஆழப்­ப­டுத்­தும் திட்­டப்­ப­ணி­கள் துவங்­கப்­பட்­டுள்­ளது.

 இந்­த­திட்­டத்தை 3 ஆண்­டு­க­ளுக்­குள் முடிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்று சரக்கு கன்­டெய்­னர் பெட்­டியை கூடு­த­லாக கையா­ளு­வ­தற்­கான புதிய வச­தியை துவக்­கி­வைத்த துறை­முக துணைச் சேர்­மன் நட­ரா­ஜன் தெரி­வித்­தார்.

துாத்­துக்­குடி வ.உ.சிதம்­ப­ர­னார் துறை­மு­கத்­தில் தெ­க்ஷின்­பா­ரத் கேட்வே பிரை­வேட் லிமி­டெட் சார்­பில் கண்­டெய்­னர் பெட்­டி­களை கூடு­த­லாக கையா­ளு­வ­தற்­காக ரப்­பர் டயர் கிரேன் சேவை   துவக்­க­விழா நேற்று நடந்­தது. விழா­வுக்கு தலைமை வகித்த துறை­முக சபை துணைத்­த­லை­வர் நட­ரா­ஜன் கொடி­ய­சைத்து ரப்­பர் டயர் கிரேன் சேவையை துவக்கி வைத்­தார். தொடர்ந்து அவர் நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது, துாத்­துக்­குடி துறை­மு­கத்­தில் தெ­க்ஷின்­பா­ரத் கம்­பெ­னியை பொறுத்­த­மட்­டில் கடந்த ௨௦­௧­௬ம் ஆண்டு ௧லட்­சத்து ௧௦­ஆ­யி­ரம்  சரக்கு பெட்­ட­கங்­கள் கையாண்­டுள்­ளது.

௨௦­௧­௭ம் ஆண்டு டிசம்­பர் மாதம் வரை ௧லட்­சத்து ௧௭­ஆ­யி­ரம் சரக்கு பெட்­ட­கங்­களை கையாண்­டுள்­ளது. ஒவ்­வொரு வார­மும்  சனி மற்­றும் புதன் கிழ­மை­க­ளில் தற்­போது துவங்­கப்­பட்­டுள்ள ரப்­பர் டயர் கிரேன் சேவையை மேற்­படி நிறு­வ­னம் செயல்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்­தில் ௫௪ சரக்கு பெட்­ட­கங்­களை கையாள இய­லும்.

  துறை­முக வளர்ச்­சி­யில் இது முக்­கிய பங்கு வகிக்­கும். வ.உ.சிதம்­ப­ர­னார் துறை­மு­கத்­திற்கு பெரிய கப்­பல்­கள் வந்து செல்­வ­தற்கு வச­தி­யாக முகத்­து­வா­ரத்தை ௧௬ மீட்­ட­ருக்கு ஆழப்­ப­டுத்­தும் திட்­டப்­ப­ணி­கள் துவங்­கி­யி­ருக்­கி­றது. வரும் ௩ ஆண்­டு­க­ளுக்­குள் இத்­திட்­டப்­பணி நிறை­வ­டைந்து செயல்­பாட்­டுக்கு வர வாய்ப்­புள்­ளது.

மேலும் துாத்­துக்­கு­டி­யி­லி­ருந்து ராமேஸ்­வ­ரம், கன்­னி­யா­கு­மரி, திரு­வ­னந்­த­பு­ரம் பகு­தி­க­ளுக்கு பய­ணி­கள் படகு சேவை துவங்­கு­வ­தற்­கான கலந்­தாய்வு விரை­வில் நடை­பெ­ற­வுள்­ளது. அதில் படகு சேவை துவங்­கு­வ­தற்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் விருப்­பத்தை பொறுத்தே இறுதி முடிவு எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு நட­ரா­ஜன் கூறி­னார்.