உண்ணாமலைக்கடையில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 07:53

நாகர்கோவில்:

உண்ணாமலைக்கடை பஞ்.,சில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது.

விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதிக்கு மட்டும் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாம் நடப்பது தொடர்பாக மனுக்கள் பெறும் முதற்கட்ட நிகழ்ச்சி காஞ்சிரக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வரும் 18ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே உண்ணாமலைக்கடை பேரூராட்சி பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.