அதங்கோட்டில் மனுநீதி திட்ட முகாம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 07:52

நாகர்கோவில்:

அதங்கோட்டில் வரும் 17ம் தேதி மனுநீதி திட்ட முகாம் நடக்கிறது.

விளவங்கோடு தாலுகா மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டரின் மனுநீதித்திட்ட இரண்டாம் கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி வரும் 17ம் தேதி காலை 11 மணியளவில் நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி நடந்த மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின்போது பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட  துறை அலுவலர்களால் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் இந்த நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத்திட்ட விபரங்களும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மெதுகும்மல் ஊராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.