வரும் 14ல் பொங்கல் பண்டிகை களை கட்டுகிறது குமரி மாவட்டம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 07:49


தக்கலை:

 தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை மறுநாள் நடப்பதையொட்டி குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்களின் விற்பனை படுஜோராக நடக்கிறது.வீதிகள் தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தமிழகத்தில் ஜாதி மத இன வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும்பொங்கல் பண்டிகை ஆகும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் அனைவரும் கொண்டாடுகின்றனர். அன்று சூரிய பகவானை வணங்கி இப்பண்டிகையை  ஆண்டுதோறும்  மக்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமப்புறங்களில்  விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெல்லை சூரிய பகவானுக்கு படைத்து புதுப்பானையில் பொங்கலிட்டு, மஞ்சல் குலைகள் , கரும்பு போன்றவற்றை வைத்து ,திருவிளக்கு ஏற்றி பொங்கல் இட்டு, பொங்கி வரும் வேளையில் பொங்கலோ,பொங்கலோ என குலவையிட்டு, பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம்.

        வட இந்தியாவில் இது மகர சங்கராந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையையொட்டி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.போகிப்பண்டிகையன்று வீட்டையும், வீட்டிலுள்ள பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதும், வீட்டுக்கு வௌ்ளை அடிப்பதும், வீட்டிலுள்ள பழைய துணிகள், பழைய பொருட்கள் போன்றவற்றை  தீயிட்டு கொழுத்தி விடுவது வழக்கமாகும்.் .

        போகி பண்டிகைக்கு 3ம் நாள் மாட்டுப்பொங்கல்  கொண்டாடப்படுகிறது. ஆண்டுமுழுவதும் விவசாயிகளுக்கு வயல்களில், உழைத்து அதன் மூலம் உணவு உற்பத்திக்கு உதவி செய்தும், பால் கொடுத்தும்,நம் வயல்களுக்கு உரம் கொடுத்தும் மனிதர்களுக்கு உதவி வரும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும்,  இந்த மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கலன்று  மாடுகளை தேய்த்து குளிப்பாட்டி அவற்றுக்கு மாலை அணிவித்துஇனிப்பு பாயாசம் வழங்கி மரியாதை செய்யப்படும்.. நான்காம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

        பொங்கல் தினத்தன்று சர்க்கரையிட்டு பொங்கி ,கரும்பும், மஞ்சளும் வைத்து  சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கம்.புதுப்பானையில் பொங்கலிடுவது வழக்கம  என்பதால் புதுப்பானைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.கோட்டரர் ஒழுகினசோி உள்ளிட்ட இடங்களில் புதுப்பானைகள் தயாரித்து விற்பனைக்காக வைத்து்ளளனர்.மேலும் மாவட்டத்தில் கரும்பும், மஞ்சள் கலைகளும் ஏராளம் குவிந்துள்ளன. குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து சந்தைகளிலும்மக்கள் கூடும் அனைத்து முக்கிய இடங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் வடசோி, கோட்டார், திங்கள் சந்தை, மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட சந்தைகளிலும், தற்போது பல்வேறு கிராமபகுதிகளிலும் கரும்பு, மஞ்சள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

        பொங்கல் பண்டிகையில் காய் கனிகளு்ம் முக்கிய பங்கு வகிப்பதால் சந்தகைளில் காய் கனிகள் வந்து குவிந்துள்ளன. சிறுகிழங்கு, கருணை கிழங்கு, பனங்கிழங்கு, கத்தரிக்காய் ,பூசணிக்காய், வௌ்ளரிக்காய், உள்ளிட்ட காய்களையும், பழவகைகளான சிங்கன்பழம், துழுவன்பழம், மட்டிபழம்,  ஏத்தன்பழம், செந்துளுவனபழம் ,பாளையன்கோட்டை பழம்உ்ளளிட்ட பழ வகைகளும், பொதுமக்கள் வாங்கி செல்ல வசதியாக சந்தைளில் வந்து குவிய துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளித்துள்ளதால், தற்போது மக்கள் சொந்த ஊருக்க வர தயாராகி   வருகின்றனர்.

        இந்த நிலையில் பொது மக்களின் வசதிக்கேற்ப மாநிலத்தின் பல்வேறு பகுதிகளான மதுர, கோவை, திருச்சி, பழனி, சென்னை உ்ள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்புபஸ்களும் 12ம்தேதி முதல் இந்த சேவை துவங்குகிறத.

        மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிய இந்த சேவை தொடரும் எனவும் தொிகிறது. அதன் பிறகும் இந்த சேவை கருத்தில் கொண்டு இயக்கப்படும் எனவும் தொிகிறது.

        ஆக மொத்தததில் பொங்கல் பண்டிககை குமரி மாவட்டத்தில களை கட்டி வருகிறது.்