லாரி கார் மோதி விபத்து : வாலி­பர் பலி, நண்­பர் படு­கா­யம்

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018 07:44


துாத்­துக்­குடி:

வல்­ல­நாடு அருகே நின்­று­கொண்­டி­ருந்த லாரி மீது  கார் மோதிய விபத்­தில் வாலி­பர் பரி­தா­ப­மாக இறந்­தார். நண்­பர் படு­கா­யம் அடைந்­துள்­ளார்.

  சாத்­தான்­கு­ளம் அருகே பொத்­த­கா­ளான்­வி­ளையை சேர்ந்­த­வர் ஐகோர்ட்­துரை மகன் சவுந்­தர்­ப­ழம்(29. இவர் அப்­ப­கு­தி­யில் செங்­கல் சூளை தொழில் செய்­து­வ­ரு­கின்­றார். நேற்று மாலை நண்­பர் நவீன் என்­ப­வ­ரு­டன் நெல்­லைக்கு காரில் சென்று கொண்­டி­ருந்­தார். வல்­ல­நாடு தாண்டி நாணல்­காடு விலக்கு அருகே சென்­ற­போது பழு­தாகி   நிறுத்­தி­யி­ருந்த லாரியை கண்டு காரை நிறுத்த சவுந்­தர்­ப­ழம் முயற்சி செய்­தார். ஆனால் பிரேக் பிடிக்­கா­மல் சென்ற கார் லாரி மீது பயங்­கர சத்­தத்­து­டன் மோதி­யது. அதில் அவர் படு­கா­யங்­க­ளு­டன் சம்­ப­வ­யி­டத்­தி­லேயே பரி­தா­ப­மாக இறந்­தார். படு­கா­யங்­க­ளு­டன் மயக்­க­ம­டைந்த நவீனை மீட்டு பாளை அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் சேர்த்­த­னர். இது­கு­றித்து முறப்­ப­நாடு போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தி­வ­ரு­கின்­ற­னர்.