நெல்லையில் கவர்னர் ஆய்வு ஆக்ரமிப்புக்கள் அகற்றம்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 09:05

திருநெல்வேலி:

நெல்லை, பாளை., யில் கவர்னர் வருகையை முன்னிட்டு ரோட்டோர ஆக்ரமிப்புக்களை மாநகராட்சியினர் அகற்றினர்.

நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டு பகுதியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆய்வு செய்தார். இதை முன்னிட்டு பஸ்ஸ்டாண்ட் உட்பகுதியில் ஆக்ரமிப்பு பெட்டிகளை மாநகராட்சியினர் அகற்றினர். திறந்தவெளி சாக்கடை ஓடை மீது பழைய ஷிட் வைத்து மூடினர். பாளை., தெற்கு பஜார் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த ஆக்ரமிப்பு வண்டிகள், பெட்டிகளை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.