நெல்லையில் இந்து முன்னணி காவிக் கொடி ஆர்பாட்டம்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 08:55

திருநெல்வேலி:

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பார்லி.யில் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணியினர் நெல்லை சிந்து பூந்துறையில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தச்சநல்லுார் மண்டல பொது செயலாளர்  இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாநில பேச்சாளர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் மற்றும்  இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.