நெல்லை ஆற்றில் கிடந்த முதி­யவர் உடல் மீட்­பு

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 08:44

திரு­நெல்வேலி:

நெல்­லையில் ஆற்றில் கிடந்த முதி­யவர் உடலை போலீசார் கைப்­பற்றி விசா­ரணை நடத்­தி­னர்.

நெல்லை, உடை­யார்­பட்­டி­, தாமி­ர­ப­ரணி ஆற்றில் ஒரு முதி­யவர் இறந்து கிடந்தார். அவ­ர் இறந்து சில நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலை­யில் இருந்­தது. இது­கு­றித்து நெல்லை ஜங்ஷன் போலீசார் விசா­ரணை நடத்­தினர்.

விசா­ர­ணையில், இறந்து கிடந்­தவர், வண்­ணார்­பேட்டை, கம்­ப­ரா­மா­யணத் தெருவைச் சேர்ந்­த பன்­னீர்­செல்வம்(72) என தெரி­ய­வந்­தது. இவர் ஆற்றுக்கு சென்ற போது வெள்­ளத்­தில் சிக்கி இறந்­துள்ளார். இவ­ரது உடலை போலீசார் கைப்­பற்றி பாளை., ஐகி­ரவுண்ட் ஆஸ்­பத்­தி­ரிக்கு போஸ்ட்­மார்ட்­டத்­திற்கு அனுப்­பி­னர்.