தமிழக கவர்னர் கன்னியாகுமரி வருகை:உயரதிகாரிகள் வரவேற்பு

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 07:35


கன்னியாகுமரி,:

இரண்டுநாள் அரசுமுறைபயணமாக கன்னியாகுமரிக்கு நேற்றிரவு வந்த தமிழக கவர்னரை தென்மண்டல ஐஜி மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றனர்.

               ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரிமாவட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் நெல்லை மாவட்ட பயணத்தை முடித்துகொண்டு நேற்றிரவு கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 9.05 மணிக்கு வந்தார்.போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட கவர்னரை தென்மண்டல ஐஜி உமேஷ்யாதவ் ,
மாவட்டகலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் படம் கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் நெல்லைசரக டிஐஜி கபில்குமார்சரத்கர், எஸ்பி துரை ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானுடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்.              இன்று காலை 6 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்தபடி சூரிய உதயத்தை பார்வையிடும் கவர்னர்,6.35 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்கிறார். 7 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கன்னியாகுமரி வருகிறார்.பின்னர் காலை உணவை முடித்துவிட்டு 9 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு  ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.பின்னர் 11.30 மணியளவில் தனிபடகு மூலம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து மதியஉணவுக்கு பின்னர் மாலை 4 மணிக்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து ரயில் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.கவர்னர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.