கன்னியாகுமரி வந்தார் தமிழக கவர்னர் : புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 07:35

நாகர்கோவில்:

கன்னியாகுமரி வந்துள்ள தமிழக கவர்னர் புயல் பாதித்த இடங்களை இன்று பார்வையிடுகிறார். 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் நேற்று கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வந்தார். நேற்று இரவு அங்கு ஓய்வெடுத்த கவர்னர் இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து தொடர்ந்து விவேகானந்தா கேந்திரம் மற்றும் கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை மண்டபத்துக்கு செல்கிறார். இதற்கிடையில் காலை 9.15 மணி முதல் 1045 மணிவரை புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார். கவர்னர் பார்வையிடும் இடம் குறித்த தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிடுகிறார். பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணிவரை அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார். பின்னர் மாலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் கன்னியாகுமரி வந்திருப்பதால் குமரி எஸ்.பி. துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.