ஒகி புயலால் வந்தது மினி கட்டர்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 07:34


நாகர்கோவில்:

ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் மரம் வெட்டும் மினி கட்டர் விற்பனைக்கு அதிகமாக வந்துள்ளது.

குமரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட ஒகி புயலால் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகளில் முறிந்து விழுந்த மரங்கள், கிளைகளை அகற்ற முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த மரங்களை வெட்டி அகற்ற கூலியாக குறைந்தது ரூ..5000 வரை கேட்கின்றனர். இதனால் பலர் இன்னும் சில நாட்கள் கழிந்தால் மரங்கள் வெட்ட ஆபர் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் இருந்து வருகின்றனர். அந்த நேரத்தில் கூலி குறையும் என நினைத்து செயல் படுகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் சீனா வரவாக மரங்கள் வெட்டும் மினி கட்டர் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மினி கட்டருக்கு மின்சாரம் வேண்டாம். அதற்கு பதிலாக பெட்ரோல் மற்றும் ஆயில் போதும். 4000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.