பாகற்­காய் விளைச்­சல் அமோ­கம்: விலை குறை­வால் விவ­சா­யி­கள் கவலை

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2017 08:15


விளாத்­தி­கு­ளம்:

விளாத்­தி­கு­ளம் மற்­றும் புதுார் பகு­தி­யில் பாகற்­காய் விளைச்­சல் அமோ­க­மாக உள்ள நிலை­யில் வரத்து அதி­க­ரிப்­பால் விலை குறைந்­துள்­ளது விவ­சா­யி­கள் மத்­தி­யில் கவலை ஏற்­பட்­டுள்­ளது.

விளாத்­திக்­கு­ளம்,புதுார் பகு­தி­க­ளில் வட­கி­ழக்கு பரு­வ­மழை காலங்­க­ளில் மானா­வாரி பயிர்­கள் சாகு­படி செய்­யப்­ப­டு­கி­றது. வானம் பார்த்த பூமி­யான இப்­ப­கு­தி­க­ளில் கடந்த புரட்­டாசி மாதம் முதல் மானா­வாரி நிலங்­க­ளில் எள், கம்பு, சோளம், பாசிப்­ப­யறு,உளுந்து, மிள­காய், மக்கா சோளம், வெங்­கா­யம், பாகற்­காய், உள்­ளிட்­டவை பயிர் செய்ய தொடங்­கி­னர்.  தற்­போது ஒகி புய­லின்­போது பெய்த தொடர்­ம­ழை­யின் கார­ண­மாக மானா­வாரி செடி­கள் நன்கு வளர்ந்து வரு­கின்­றன.

விளாத்­தி­கு­ளம் அடுத்த புதுார் அருகே  முத்­துச்­சா­மி­பு­ரம்,சக்­க­னா­பு­ரம்,சிவ­லார்­பட்டி, பட்­டி­தே­வன்­பட்டி ஆகிய பகு­தி­க­ளில் 100க்கும் மேற்­பட்ட ஏக்­கர் பரப்­ப­ள­வில் பாகற்­காய் பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது பாகற்­காய் நன்கு காய்த்­துள்ள நிலை­யில் அவற்றை பறித்து விற்­பனை செய்­யும் பணி­யில் விவ­சா­யி­கள் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­னர்.

மழை­யால் பாதிப்பு

இது­கு­றித்து முத்­துச்­சா­மி­பு­ரம் விவ­சாயி மகா­லாட்­சுமி கூறி­யது., புரட்­டாசி மாதம் 20-ம் தேதிக்கு மேல் பாகற்­காய் பயி­ரிட்­டேன். இப்­ப­யிர் 40 நாள்­க­ளில் காய்க்­கத் தொடங்­கி­வி­டும். அதி­லி­ருந்து வாரத்­துக்கு இரு­முறை காய்­களை பறிக்­க­வேண்­டும். 6 மாத காலம் கொண்ட இப்­ப­யி­ரால் நல்ல வரு­மா­னம் கிடைக்­கி­றது. மேலும் தற்­போது அதிக வரத்­தால் விலை கிலோ 15 ரூபாய்க்­கும் மிக­வும் குறை­வாக கொள்­மு­தல் செய்­கின்­ற­னர். மேலும்

பாகற்­காய் செடி­கள் கடந்த வாரம் ஒகி புய­லின் தாக்­கத்­தால் கன மழை கார­ண­மாக மண்­ணில் அதி­க­ளவு ஈரப்­ப­தம் காணப்­ப­டு­வ­தால் வேர் பிடிப்­பாக இல்லை. இதன் கார­ண­மாக செடி­க­ளில் பழுப்பு நிற­மாக மாறி பாகற்­காய் விளைச்­சல் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

பாவற்­காய் விளைச்­சல் குறித்து ம.தி.மு.க., மாநில விவ­சாய அணி துணைச்­செ­ய­லா­ளர் வர­த­ரா­ஜன் கூறி­ய­தா­வது, இங்கு விளை­யும் பாகற்­காய் சுவை மிகுந்­த­தா­கும். இது துாத்­துக்­குடி, மதுரை, திரு­நெல்­வேலி, திண்­டுக்­கல், ஒட்­டன்­சத்­தி­ரம் உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கி­றது.

கடந்­தண்டு பரு­வ­மழை பொய்த்து போன­தால் விவ­சா­யம் பாதிப்­ப­டைந்­தது.  இந்­தாண்டு ஆரம்­பம் முதல் பரு­வ­மழை சரி­யாக பெய்­யாத கார­ணத்­தி­னால் விளைச்­சல் குறை­வாக இருந்­தது. பாகற்­காய் கிலோ ரூ.60க்கு விற்­ப­னை­யா­னது தற்­போது ஒகி புய­லின் தாக்­கத்­தால் நல்­ல­மழை பெய்து விளைச்­சல் பல­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. இருந்­தும் விலை பல­ம­டங்கு குறைந்­துள்­ள­தால் விவ­சா­யி­கள் பெரும் கவ­லைக்­குள்­ளா­கி­யுள்­ள­னர் என்­றார்.