பாபா மசூதி இடிப்பு தினம் திருச்­செந்­துார் கோயி­லில் தீவிர கண்­கா­ணிப்பு

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2017 08:12


திருச்­செந்­துார்:

பாபர் மசூதி இடிக்­கப்­பட்ட தினத்தை முன்­னிட்டு திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் போலீஸ் பாது­காப்பு  தீவி­ரப்­ப­டுத்த ப்பட்­டுள்­ளது. மெட்­டல் டிடெக்­டர் பரி­சோ­த­னைக்கு பிறகே பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்க ப்படு­கின்­ற­னர்.

பாபர் மசூதி இடிக்­கப்­பட்ட தினத்­தை­யொட்டி தமி­ழ­கம் முழு­வ­தும் வழிப்­பாட்டு ஸ்தலங்­கள், பொது­மக்­கள் அதிக கூடும் இடங்­கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்­றும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் மிகுந்த பகு­தி­க­ளில் போலீஸ் பாது­காப்பு தீவி­ரப்­ப­டுத்த ப்பட்­டுள்­ளது. பாது­காப்பு அச்­சு­றுத்­தல் உள்ள வழிப்­பாட்டு ஸ்தலங்­க­ளில் கூடு­தல் போலீ­சார் பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டுத்த ப்பட்­டுள்­ள­னர்.

அறு­படை வீடு­க­ளில் ஒன்­றான திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லி­லும் பாது­காப்பு தீவி­ரப்­படு த்தப்­பட்­டுள்­ளது. இக்­கோ­யி­லில் சாத்­தான்­கு­ளம் டி.எஸ்.பி. (பொறுப்பு) பாலச்­சந்­தி­ரன் மேற்­பார்­வை­யில் திருச்­செந்­துார் கோயில் ஸ்டேஷன் இன்ஸ்­பெக்­டர் ஷீஜா­ராணி தலை­மை­யில் சப்– இன்ஸ்­பெக்­டர்­கள் காமாட்சி சுந்­த­ரம், சின்­னத்­துரை, குமா­ர­சாமி, கார்த்­திக், செந்­தில்­வேல் மற்­றும் போலீ­சார் பாது­காப்பு பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

டிச. 6ம் தேதியை முன்­னிட்டு கூடு­த­லாக  துாத்­துக்­குடி நில அப­க­ரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. தலை­மை­யில் நில அப­க­ரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்­பெக்­டர் சாகுல்­ஹ­மீது மற்­றும் பட்­டா­லி­யன் போலீ­சார் 40 பேர் தீவி­ரப்பு பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டுத்­தப்ப ட்டுள்­ள­னர்.

இக்­கோ­யி­லில் பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு செல்­லும் பிர­தான வழி­க­ளில் ஏற்­க­னவே நிரந்­த­ர­மாக மெட்­டல் டிடெக்­டர் கருவி பொருத்­தப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த வழி­யாக செல்­லும் பக்­தர்­கள் தீவிர பரி­சோ­த­னைக்கு பிறகு சுவாமி தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்­கப்ப டுகின்­ற­னர்.

மேலும் கூடு­த­லாக திருச்­செந்­துார்– உடன்­குடி மற்­றும் திருச்­செந்­துார் – ஆறு­மு­க­நேரி இடையே வாக­னத்­தி­லும் போலீ­சார் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

திருச்­செந்­துார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்­றும் பொது­மக்­கள் கூடும் இடங்­க­ளில் தாலுகா போலீஸ் இன்ஸ்­பெக்­டர் ரகு­ரா­ஜன் தலை­மை­யில் போலீ­சார்  பாது­காப்பு பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.