துாத்துக்குடியில் 2வது நாளாக கனமழை ஆத்துாரில் 2 லட்சம் வாழைகள் சேதம்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2017 11:26

துாத்துக்குடி:

துாத்துக்குடி மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை பெய்தது. ஆத்துாரில் சுமார் 2 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

துாத்­துக்­குடி மாவட்­டத்­தில் கடந்த இரண்டு நாட்­க­ளாக மழை வெளுத்து வாங்கி கொண்­டி­ருக்­கி­றது.  மழை­யி­னால் மாவட்­டத்­தில் பாதிப்பு எது­வும் ஏற்­பட்­டுள்­ளதா என்­பதை செய்தி மற்­றும் விளம்­ப­ரத்­துறை அமைச்­சர் கடம்­பூர் ராஜூ நேற்று மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­யில் நேரில் சென்று ஆய்வு செய்­தார். அமைச்­ச­ரு­டன் துாத்­துக்­குடி மாவட்ட கண்­கா­ணிப்பு அதி­காரி குமார் ஜெயந்த், கலெக்­டர் வெங்­க­டேஷ் மற்­றும் அதி­கா­ரி­கள் உடன் சென்­ற­னர்.

வாழைகள் சேதம்

ஆத்­துார் சுற்­றுப்­ப­கு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு பலத்த காற்­று­டன் பெய்த கன­ம­ழை­யால் ஆத்­துார், மேல­ஆத்­துார், சேதுக்­கு­வாய்த்­தான், சுகந்­தலை, மரந்­தலை, சோழி­யாக்­கு­றிச்சி, நெடுங்­கரை, சொக்­கப்­ப­ழங்­கரை, காரா­விளை, கீர­னூர், சேர்ந்­த­பூ­மங்­க­லம், குமா­ரப்­பண்­ணை­யூர், புது­ந­கர், முக்­காணி உள்­பட பல்­வேறு பகு­தி­க­ளில் குலை­தள்­ளிய நிலை­யி­லி­ருந்த வாழை­கள் உள்­பட சுமார் 2 லட்­சம் வாழை­கள் சேதமடைந்தன. சுமார் ரூ.5 லட்­சம் மதிப்­பி­லான வெற்­றி­லைக்­கொ­டிக்­கால்­க­ளும் சேத­ம­டைந்­தன.

திருச்­செந்­துா­ரில் கடந்த 3 நாட்­க­ளாக பெய்த கன மழை­யால் ரத­வீ­தி­கள், கோயில் செல்­லும் முக்­கிய ரோடான சபா­ப­தி­பு­ரம் தெரு ரோடு­கள் மிக­வும் பழு­த­டைந்­தது. இத­னால் வாகன ஓட்­டி­க­ளும் பொது­மக்­க­ளும் கடும் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர்.  கோயில் பஸ் ஸ்டாண்ட் தண்­ணீ­ரில் மிதப்­ப­தால் பக்­தர்­கள் மிக­வும் அவ­தி­ய­டைந்து வரு­கி­றார்­கள்.