நெல்லையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி செய்ததாக வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3 பேர

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:57

திருநெல்வேலி:

நெல்லையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

நெல்லையில் வெடிபொருள் தயாரித்து சுதந்திரதினத்தை சீர்குலைக்க சதி செய்ததாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேட்டைடைய சேர்ந்த அப்துல் கபூர், நெல்லை டவுனை சேர்ந்த ஹீராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து வெடிபொருள் தயாரிப்பதற்கான வயர், பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல் கபூர், ஹீரா, இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக திருவாரூரை சேர்ந்த அலி அப்துல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை 4வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி கிளாட்ஸன் பிளசட் தாகூர் விசாரித்தார். வழக்கில் குற்றச்சாட்டு சரியாக நிரூபிக்கப்பட வில்லை என்ற காரணத்தால் அவர்கள் மூவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.