மேலப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பலி

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:56

திருநெல்வேலி,:

மேலப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொல்லீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் ராஜ் (22). கட்டட தொழிலாளி. இவர் மேலப்பாளையம் அசோகாபுரம் பகுதியில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு மாடிப்பகுதியில் உள்ள சுவரில் பூச்சுவேலை நடந்தது.

அப்போது கட்டடத்தின் அருகில் சென்ற மின்கம்பியின் மீது ராஜ் வைத்திருந்த கரண்டி எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராஜ் தூக்கிவீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.