மேலப்பாளையம் டயர் குடோனிற்கு ‘சீல்’ மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:51திருநெல்வேலி:

மேலப்பாளையத்தில் கொசு புழுக்கள் கண்டறியப் பட்ட பழைய  டயர் குடோ னிற்கு மாநகராட்சி அதி காரிகள் சீல் வைத்தனர்.

நெல்லை  மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்ரட் சந்தீப் நந்துாரி தினமும் வீடுகள், வர்த்தக வளாகங்கள், கடைகள், பள்ளிகள் உட்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறார். டெங்கு கொசு புழு உள்ள இடங்களுக்கு அபராதம் மற்றும் சீல் வைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத் திற்குட்பட்ட பகுதிகளில் உதவி கமிஷனர் கவிதா தலைமையில் அலு வலர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப் போது மேலப்பாளையம் அமுதா பீட் நகரில் பழைய டயர் குடோனில் ஆய்வு செய்தனர். இதில் அங்குள்ள டயரில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி இருப்பது தெரிய வந்தது.  இதனையடுத்து உதவி கமிஷனர் கவிதா, டயர் குடோ னிற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் மாந கராட்சி அலுவலர்கள் டயர் குடோனிற்கு சீல் வைத்த தோடு, சுகாதார நோட்டீஸ் வழங்கினர்.  தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.