ஓவியப் போட்டி பரிசு வழங்கல்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:08

வில்லுக்குறி:

வில்லுக்குறியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நமது ஊர் நமது வளர்ச்சி அமைப்பு சார்பில்   பள்ளி மாணவ, மாணவிகளுக்கு   நடந்த ஓவியக் போட்டியில் மாவட்டத்தின் பல பள்ளிகளில்  இருந்து 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.