மின்­சா­ரம் தாக்கி 2 சிறு­மி­கள் பலியான சம்­ப­வத்­திற்கு தமி­ழக அரசே பொறுப்­பேற்க வேண்­டும்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2017 11:00


திருச்­செந்­துார்:

சென்­னை­யில் மழை வெள்­ளத்­தில் மின்­சா­ரம் தாக்கி 2 சிறு­மி­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வத்­திற்கு தமி­ழக அரசு பொறுப்­பேற்க வேண்­டும் என ம.தி.மு.க., பொது­செ­ய­லா­ளர் வைகோ திருச்­செந்­துா­ரில் கூறி­னார்.

 மதி­முக., தொண்­டர் படை மாநில துணை செய­லா­ளர் ராமையா – சங்­கீதா திரு­ம­ணம் திருச்­செந்­துா­ர் கோயி­லில் நேற்று நடந்­தது. இத்­தி­ரு­ம­ணத்தை நடத்தி வைக்க அக்­கட்­சி­யின் பொது செய­லா­ளர் வைகோ திருச்­செந்­துார் வந்­தார். அப்­போது அவர்  நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:

தமி­ழ­கத்­தில் அக்­டோ­பர், நவம்­பர் மாதத்­தில் பலத்த மழை பெய்­யும் என்று வானிலை அறி­விப்பு முன்­கூட்­டியே செய்­யப்­பட்­டது.

இத­னால் சென்னை மாந­க­ரம் உள்­ளிட்ட, வட­மா­வட்­டங்­க­ளி­லும் இன்­னும் பல பகு­தி­க­ளி­லும் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­வ­தால் பலத்த சேத­மும், உயிர் இழப்­பு­க­ளும் ஏற்­பட வாய்ப்பு இருக்­கி­றது. வீடு­கள் வெள்­ளத்­தில் மூழ்கி விடக்­கூ­டாது. இதற்கு எல்­லாம் முன்­கூட்­டியே ஆங்­காங்கே துார் வார வேண்­டும். 2015ம் ஆண்டு வர்தா பெரு­வெள்ள நாசத்­திற்கு பிறகே அனைத்து தரப்­பி­ன­ரும் குறிப்­பி­ட்டு வந்­தும்,  துார்­வா­ரும் பணி­களை, மூடிக்­கி­டக்­கிற மணல்­மே­டு­களை அகற்ற அரசு அக்­க­றை­காட்­ட­வில்லை. இத­னால் மிகுந்த பாதிப்­புக்கு மக்­கள் ஆளாகி இருக்­கி­றார்­கள்.

சில இடங்­க­ளில் பயிர்­கள் நீரில் மூழ்கி விவ­சா­யி­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.குடி­ம­ராத்து திட்­டம் என்­பது வர­வேற்­கத்­தக்­கது. அதை பல ஆண்­டு­க­ளாக வலி­யு­றத்தி வந்­தேன். ஆனால் இதனை அரசு முறை­யாக செயல்­ப­டுத்­த­வில்லை. அத­னால் தான் எதிர்­கட்சி தலை­வர் ஸ்டாலின் கூட, ரூ.400 கோடி­யில் எத்­தனை ஏரி­க­ளில், கண்­மாய்­க­ளில் மரா­மத்து செய்­யப்­பட்­டது என்­பது குறித்து வெள்ளை அறிக்கை வெளி­யிட வேண்­டும் என மிக சரி­யாக கேட்­டி­ருக்­கி­றார்.

தமி­ழ­கத்­தில் டெங்கு காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு ஏரா­ள­மான உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளது. அதை மறைக்க அரசு முயற்சி செய்ய கூடாது. அதே போல 400க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­னர்.

இன்­றைக்கு தமி­ழ­கம் ஒரு­வி­த­மான நெருக்­க­டி­யில் தத்­த­ளிக்­கும் நிலைமை ஏற்­பட்டு இருக்­கி­றது. முன்­பெல்­லாம் பெரும்­பா­லான ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் தமி­ழ­கத்­தில் பணி செய்ய விரும்­பு­வார்­கள். ஆனால் தற்­போது பணி­பு­ரி­யும் ஐ.ஏ.எஸ் அதி­கா­ரி­கள், மத்­திய அரசு பணிக்கு போய்­வி­ட­லாம் என்று விருப்­பத்தை தெரி­வித்து வெளி­யே­று­வது தமி­ழ­கத்­திற்கு அவ­மா­ன­மா­கும். நல்ல நேர்­மை­யான அதி­கா­ரி­கள் அனைத்து துறை­க­ளி­லும் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு பணி­யாற்ற தகு­தி­யான இடங்­களை ஒதுக்கி தர­வேண்­டும்.

விவ­சா­யத்­தை­யும் மாநில அரசு பட்­டி­ய­லில் இருந்து மத்­திய அர­சுக்கு கொண்டு செல்­வ­தாக இருந்­தால், தமி­ழ­கத்­தில் வள­மான பகு­தி­க­ளும் பாலை­வ­ன­மாக மாறி­வி­டும் பேரா­பத்து இருக்­கி­றது. டெல்டா பகுதி முழு­மை­யாக அழிந்­து­வி­டும். இதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரு­கி­றோம். மத்­திய அர­சின் இந்த போக்கு கவ­லை­ய­ளிக்­கி­றது.

சென்­னை­யில் மழை வெள்­ளத்­தில் மின்­சா­ரம் தாக்கி 2 பெண் குழந்­தை­கள்  உயி­ரி­ழந்த சம்­ப­வம் நெஞ்ச பத­ற­வைக்­கி­றது. தமி­ழக அரசே இதற்கு பொறுப்­பேற்க வேண்­டும். மழை வெள்ள காலத்­தில் கவ­ன­மா­க­வும் முன்­னெச்­ச­ரிக்கையு­டன் அரசு மற்­றும் அதி­கா­ரி­கள் செயல்­பட வேண்­டும்.  தமி­ழ­கத்­தில் ஆற்று மணல் சுரண்டப் பட்டு கோடி கோடி­யாக பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது.

 கிரா­னைட் சம்­ப­வத்­தில் சி.பி.ஐ., விசா­ரணை வேண்­டும் என சகா­யம் ஐ.ஏ.எஸ். ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். அதே போல் துறை­மு­கத்­தில் மணல் முடக்­கப்­பட்­டது குறித்து மத்­திய அரசு தெளி­வுப்­ப­டுத்­த­வேண்­டும். இவ்­வாறு வைகோ கூறி­னார்.