வீடு­பு­குந்து ரூ. 1.41 லட்­சம் நகை­கள் கொள்ளை! *துாத்­துக்­கு­டி­யில் துணி­க­ரம்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2017 10:56

துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­யில் வீட்­டின் பூட்டை உடைத்து மர்­ம­ந­பர்­கள் தங்­கம், வைரம் நகை­களை கொள்­ளை­ய­டித்து சென்­ற­னர்.

துாத்­துக்­குடி சங்­கர்­கா­லனி பிள்­ளை­யார் கோயில் தெருவை சேர்ந்­த­வர் சந்­த­ன­மா­ரி­முத்து மனைவி அன்­ன­லெட்­சுமி(55). இவர் கடந்த 20ம் தேதி பெங்­க­ளூ­ருவில் உள்ள மகள் வீட்­டுக்கு சென்­றுள்­ளார். இதைப் பயன்­ப­டுத்தி வீட்­டின் முன்­பக்க கிரில் கேட் பூட்டு மற்­றும் முன்­க­தவு பூட்டை மர்­ம­ந­பர்­கள் உடைத்­துள்­ள­னர். பின்­னர் உள்ளே சென்று பீரோ சாவியை கண்­டு­பி­டித்து லாக்­கரை திறந்­துள்­ள­னர். அதி­லி­ருந்து 5 பவுன் எடை­யுள்ள தங்­கம், வைரம் நகை­க­ளை­யும், 2 வெள்ளி மற்­றும் ஒரு பித்­தளை குத்­து­வி­ளக்­கை­யும் திரு­டி­யுள்­ள­னர்.  கொள்­ளை­ய­டித்த பொருட்­க­ளு­டன் தப்­பி­விட்­ட­னர்.

  இவற்­றின் மதிப்பு ரூ. 1.41­லட்­சம் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் வீடு திரும்­பிய அன்­ன­லெட்­சுமி கத­வு­கள் திறந்­த­நி­லை­யில் கிடந்­தது கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தார். உள்ளே சென்று பார்த்­த­போது மேற்­படி நகை மற்­றும் பொருட்­கள் திருடு போனது தெரி­ய­வந்­தது.இது­கு­றித்து புகா­ரின் பேரில் தென்­பா­கம் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தி­வ­ரு­கின்­ற­னர்.