திருச்­செந்­துா­ரில் கப்­பல் ஊழி­யர் வீட்­டில் ரூ. 4 லட்­சம் நகை, பணம் கொள்ளை

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2017 19:15

திருச்­செந்­துார்:

திருச்­செந்­துா­ரில் கப்­பல் ஊழி­யர் வீட்­டில்  கதவை உடைத்து பீரோ­வில் இருந்த ரூ. 4 லட்­சம் மதிப்­பி­லான நகை, மற்­றும் ரொக்­கப்­ப­ணம் திரு­டப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து தாலுகா போலீ­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

திருச்­செந்­துார் குறிஞ்சி நக­ரைச் சேர்ந்­த­வர் ஜெக­நா­தன் (58). இவ­ரது மனைவி மெடோனா. இவர்­க­ளது மகன் கபி­லன் (25). மரு­ம­கள் ஜெனி ஆகி­யோர் ஒரே வீட்­டில் வசித்து வரு­கின்­ற­னர். கபி­லன் கப்­ப­லில் வேலை பார்த்து வரு­கி­றார்.

 தற்­போது விடு­மு­றை­யில் ஊருக்கு வந்­துள்­ளார். இந்­நி­லை­யில் துாத்­துக்­கு­டி­யில் நடந்த உற­வி­னர் வீட்டு திரு­ம­ணத்­திற்கு ஜெக­நா­தன் தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சென்­று­விட்­டார். பின்­னர் நேற்று மாலை­யில் தான் ஜெக­நா­தன் குடும்­பத்­தி­னர் வீடு திரும்­பி­னர். அப்­போது வீட்­டின் முன்­பக்க கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பதை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.

உள்ளே சென்று பார்த்த போது வெவ்­வேறு அறை­க­ளி­லி­ருந்து மூன்று பீரோக்­கள் உடைக்­கப்­பட்டு அதி­லி­ருந்த பதி­னைந்­தரை  பவுன் தங்க நகை­கள், வெள்ளி தட்டு, வெள்ளி டம்­ப­ளர், 2 கொலு­சு­கள் மற்­றும் ரூ.1.50 லட்­சம் ரொக்­கப்­ப­ணம் திரு­டப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

 இத­கு­றித்து திருச்­செந்­துார் தாலுகா போலீ­சில் ஜெக­நா­தன் புகார் செய்­தார். இன்ஸ்­பெக்­டர் ரகு­ரா­ஜன், சப்– இன்ஸ்­பெக்­டர் ரச­லை­வன் ஆகி­யோர் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ரணை நடத்­தி­னர். மேலும்  விரல் ரேகை நிபு­ணர்­கள், மோப்­ப­நாய் வர­வ­ழைக்­கப்­பட்டு சோதனை நடத்­தப்­பட்­டது. திருடு போன நகை­க­ளின் மதிப்பு ரூ.4 லட்­சம் ஆகும்.

அடுத்­த­டுத்த நாளில் பர­ப­ரப்பு

திருச்­செந்­துார் பகு­தி­யில் அண்மை காலங்­க­ளில் வீட்டு காம்­ப­வுண்ட் சுவரை ஏறி குதித்து மர்ம நபர்­கள் கைவ­ரிசை காட்டி வரு­வது தொடர்­க­தை­யா­கி­விட்­டது. கடந்த 2 மாதங்­க­ளுக்கு முன் திருச்­செந்­துார் அருகே குமா­ர­பு­ரத்­தில் வேளாண்மை மானே­ஜர் வீட்­டில் மர்­ம­ந­பர் உள்ளே ஏறி குதித்து 15 பவுன் தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. இதற்­கி­டையே திருச்­செந்­துார் அருகே எரு­சே­லத்தை சேர்ந்த தலைமை ஆசி­ரி­யை­யி­டம் ரூ.17 பவுன் தங்­க­செ­யினை மர்­ம­ஆ­சா­மி­கள் துரத்தி சென்று பிடுங்கி சென்­ற­னர்.

இந்த சம்­ப­வங்­க­ளின் தொடர்ச்­சி­யாக குறிஞ்சி நக­ரில் ஜெக­நா­தன் வீட்­டில் திருட்டு சம்­ப­வம் நடந்­துள்­ளது.