விளாத்திகுளத்தில் தலை­யில் அம்­மிக்­கல்லை போட்டு மனைவி கொலை

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2017 19:15

விளாத்­தி­கு­ளம்:

விளாத்­தி­கு­ளத்­தில் மனை­வி­யின் நடத்­தை­யில் சந்­தே­க­பட்டு குடி­போ­தை­யில் அவ­ரது தலை­யில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த கண­வரை விளாத்­தி­கு­ளம் போலீ­சார் கைது செய்­த­னர்.

விளாத்­தி­கு­ளம் மீரான்­பா­ளை­யம் தெரு­வைச் சேர்ந்­த­வர் நாக­ரா­ஜன். இவ­ரது மனைவி சக்­கம்­மாள் இவர்­க­ளுக்கு 3 மகள்கள் உள்­ள­னர். இதில் மூத்த மகள் சண்­மு­க­பி­ரியா (21) வுக்கும் தாய் சக்­கம்­மா­ளின் தம்பி லாரி டிரை­வ­ராக வேலை பார்க்­கும் அழ­கு­சுந்­த­ரத்திற்கும் 2011ம் ஆண்டு ஏப்­ரல் மாதம் திரு­ம­ணம் நடந்­தது. இத் தம்­ப­திக்கு கிருபா (5) என்ற பெண் குழந்தை உள்­ளது. 

அழ­கு­சுந்­த­ரத்­துக்கு மது அருந்­தும் பழக்­கம் இருந்­தது. மது குடிக்க அடிக்­கடி பணம் கேட்டு சண்­மு­கப்­பி­ரி­யா­வி­டம் சண்­டை­யிட்டு வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லை­யில் சண்­மு­க­பி­ரியா குழந்­தையை படிக்க வைக்­க­வும், குடும்ப வறு­மை­யின் கார­ண­மாக  விளாத்­தி­கு­ளத்­தில் ஒரு ஸ்டூடி­யோ­வில் வேலை பார்த்து வந்­தார். கடந்த சில மாதங்­க­ளாக அழகு சுந்­த­ரம் ஒழுங்­காக வேலைக்­குச் செல்­லா­மல் சண்­மு­கப்­பி­ரி­யா­வி­டம் பணம் வாங்­கிக்­கொண்டு மது அருந்­து­வ­தும், அவ­ரது நடத்­தை­யில் சந்­தே­கப்­பட்டு ஆபா­ச­மாக பேசு­வ­தும், அடிப்­ப­து­மாக இருந்தார். இத­னால் சண்­மு­கப்­பி­ரியா பல மாதங்­க­ளாக மன உளைச்­ச­லில் இருந்து வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லை­யில் நேற்று வழக்­கம் போல் வேலை முடித்து வீடு திரும்­பிய சண்­மு­க­பி­ரி­யா­வி­டம் குடி­போ­தை­யில் வீட்­டிற்கு வந்த அழ­கு­சுந்­த­ரம் மீண்­டும் குடிப்­ப­தற்கு பணம் கேட்டு வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்டு சண்­மு­க­பி­ரி­யாவை தாக்­கி­யுள்­ளார். இதில் சண்­மு­கப்­பி­ரியா நிலை தடு­மாறி கீழே விழுந்­துள்­ளார். அப்­போது அரு­கில் கிடந்த அம்மி கல்லை தூக்கி சண்­மு­கப்­பி­ரி­யா­வின் தலை­யில் போட்­டுள்­ளார். இதில் சண்­மு­கப்­பி­ரியா சம்­பவ இடத்­தி­லேயே   துடி­து­டித்து உயி­ரி­ழந்­தார்.  

இந்­நி­லை­யில் அழகு சுந்­த­ரம் அங்­கி­ருந்து தப்­பி­னார். இது­கு­றித்து தக­வ­ல­றிந்த விளாத்­தி­கு­ளம் டி.எஸ்.பி., தர்­ம­லிங்­கம், இன்ஸ்­பெக்­டர் ராஜ், எஸ்ஐ சங்­கர் ஆகி­யோர் சம்­பத் இடத்­துக்கு விரைந்து சென்று சண்­மு­கப்­பி­ரி­யா­வின் உடலை கைப்­பற்றி விளாத்­தி­கு­ளம் அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு பிரேத பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைத்­த­னர்.

கொலை செய்­து­விட்டு தப்பி ஓடிய அழ­கு­சுந்­த­ரத்தை போலீ­சார் வலை வீசி தீவி­ர­மாக தேடி­வந்­த­னர். இந்­நி­லை­யில் விளாத்­தி­கு­ளம் பஸ் ஸ்டாண்ட் அருகே போலீ­சார் அழ­கு­சுந்­த­ரத்தை கைது செய்­த­னர்.

அழ­கு­சுந்­த­ரத்­தி­டம் போலீ­சார் நடத்­திய விசா­ர­ணை­யில் சண்­மு­க­பி­ரி­யா­வின்  நடத்­தை­யில் சந்­தே­கம் இருந்­த­த­தால் குடி­போ­தை­யில் கொலை செய்­து­விட்­ட­தாக கூறி­யுள்­ளார்.இச்­சம்­ப­வத்­தால் விளாத்­தி­கு­ளம் பகு­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­பட்­டுள்­ளது.