தினமலர் ராகவன் மறைவு பிராமணர் சங்கம் இரங்கல்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:48

திருநெல்வேலி:

தினமலர் பார்ட்னர் ஆர்.ராகவன் மறைவிற்கு அகில பாரத பிராமணர் சங்க கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அகில பாரத பிராமணர் சங்க மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நெல்லையில் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தினமலர் பங்குதாரரும், சிறந்த பத்திரிகையாளருமான ராகவன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மூத்த துணைத்தலைவர் டி.ஆர்.நடராஜஐயர், ‘தினமலர் பார்ட்னர் ராகவனின் பத்திரிகை பணிகளை நினைவு கூர்ந்தார். ராகவனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பத்திரிகை உலகிற்கே பேரிழப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.