அம்பாசமுத்திரம் தொழிலாளி கொலை வழக்கு லோடு ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:47

திருநெல்வேலி,:

 அம்பாசமுத்திரத்தில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் லோடு ஆட்டோ டிரைவ ருக் கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்ப ளித்தது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேடுவர் தெரு வை சேர்ந்த சண்முகம் மகன் அய்யாபிள்ளை(43), லோடு ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி அகஸ்தியர் தெருவில் லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அம்பாச முத்திரம் ஜாமீயா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பக்கீர் மைதன்(52) சகோதரர் ஜாகீர் உசேன் பைக்கில் சென்றார். ரோட்டில் ஆட்டோவை நிறுத்தியது தொடர்பாக அய்யா பிள்ளை யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஜாகீர் உசேன் போலீசில் புகார் செய்ய சென்றார். தகவல் அறிந்து பக்கீர்மைதீன்(52), அய்யா பிள்ளை யிடம் விளக்கம் கேட்டார். அப்போது இருவருக் குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அய்யாபிள்ளை, கல்லால் பக்கீர் மைதீனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த பக்கீர் மைதீன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார். அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யாபிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 4வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் , குற்றவாளியான அய்யாபிள்ளைக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிதத்தார்.