மரத்தில் இருந்­து விழுந்­த­வர் பலி

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:46

திரு­நெல்­வேலி,:

திசை­யன்­விளை அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த முதி­யவர் ஆஸ்­பத்­தி­ரியில் இறந்­தார்.

திசை­யன்­விளை அருகே கந்­த­ன்­கு­டி­யி­ருப்பு, வேதக்­கோயில் தெரு­வைச் சேர்ந்­தவர் ஹரி(60). இவர் கடந்த 3ம் தேதி அப்­ப­கு­தியில் தென்னை மரத்தில் ஏறிய போது கீழே விழுந்து படு­கா­ய­ம­டைந்தார். குடும்­பத்­தினர் அவரை பாளை., ஐகி­ரவுண்ட் ஆஸ்­பத்­தி­ரியில் சேர்த்­தனர். நேற்று ஹரி­ இறந்­தார்.

இதுகு­றித்து திசை­யன்­விளை போலீசார் விசா­ரணை நடத்­தி­னர்.