ஆம்­னி­பஸ்கள் முறை­கேடு புகார்: வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கத்­தில் விஜிலன்ஸ் சோதனை

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:44


திரு­நெல்­வேலி:

ஆம்னி பஸ்கள் முறை­­கேடு புகார்­ எதி­ரொ­லி­யாக நெல்லை வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கத்தில் விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்­தி­னர். 

தீபா­வளிப் பண்­டி­கையை முன்­னிட்­டு தமி­ழகம் முழு­வதும் முக்­கிய ஊர்­க­ளுக்கு இடை­யே தனியார் ஆம்­னி பஸ்கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. பய­ணிகள் கூட்ட நெரி­சலைப் பயன்­ப­டுத்தி ஆண்­டு­­­­தோறும் ஆம்­னி பஸ்­களில் கூடுதல் கட்­டணம் முறை­கே­டாக வசூ­லிக்­கப்­ப­டு­வ­தாக புகார்கள் கூறப்­ப­டு­கி­றது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்­டண வசூல் நடப்­ப­தாக இந்த ஆண்டும் புகார் கூறப்­பட்­டது. இதன் பின்­ன­ணியில் போக்­கு­­வ­ரத்து துறை அலு­வ­லர்கள் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­ற­து.

இதை­ய­டுத்­து, ஆம்னி பஸ்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டதில் வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கங்­களில் முறை­கே­டுகள் நடந்­த­தா என விசா­ரிக்க அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. இதன் எதி­ரொ­லி­யாக, தமி­ழகம் முழு­வதும்பல்­வேறு வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கங்­களில் விஜிலன்ஸ் போலீசார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

நெல்லை வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கத்தில் டி.எஸ்.பி., மதி­ய­ழகன் தலை­மையில் விஜிலன்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்­தினர். மதியம் துவங்­கிய சோதனை, இரவு வரை நீடித்­தது. சோதனை நடந்த போது வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வலர், மோட்டார் வாகன ஆய்­வா­ளர்கள் அலு­வ­ல­கத்தில் இல்லை.

அலு­வ­லக வளா­கத்தில் இருந்த 15க்கும் மேற்­பட்டபுரோக்­கர்கள், சந்­தே­கத்­­திற்­­கு­ரிய வகையில் நின்று கொண்­டி­ருந்த சில­ரிடம் போலீசார் விசா­ரணை நடத்­தி­னர். அலு­வ­லக ஆவணங்கள், அலு­வ­லகத்தில் இருந்த பணத்தை போலீசார் ஆய்வு செய்­தனர். சோதனை நடந்த போது அலு­வ­ல­கத்­திற்குள் வெளி நபர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்­லை.

இது­கு­றித்து விஜிலன்ஸ் போலீஸ் தரப்பில் கேட்ட போது, ''அலு­வ­ல­கத்தில் இருப்பில் உள்ள பணம், அவற்­றுக்­கான ஆவ­ணங்­களைப் பார்­வை­யிட்டு இரண்டும் சரி­யாக உள்­ளதா என ஆய்வு நடத்­தினோம். சோத­னையில் பணம் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை. சோதனை தொடர்­பான அறிக்கையை மேலி­டத்­திற்கு அனுப்பி உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்" என்­ற­னர். விஜி­லன்­ஸ் போலீசார் நடத்­திய சோதனையால் அலு­வ­லக வளா­கத்தில் பர­ப­­ரப்பு ஏற்­பட்­ட­து.