14ல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:27

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 14ம் தேதி  நடக்கிறது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2017–-2018ம் ஆண்டில் கிராம நலன் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் கடந்த 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதில்  படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும்விதமாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 14ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பெருநகரங்களிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தன்கோடு, திருவட்டார், கிள்ளியூர், முஞ்சிறை மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளை சார்ந்த 8ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி (ஐடிஐ), பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, நர்சிங், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இரு பாலரும் தங்களது கல்விசான்றிதழ், சாதிசான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிசான்றுகளின் அசல் மற்றும் நகல் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு    திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இணைப்பு கட்டடம், இரண்டாம் தளம், நாகர்கோவில் - 1 என்ற முகவரியிலோ அல்லது 04652-279275, 04652-278449 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் dpiu_kki@yahoo.com என்ற இ மெயில் முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.