நாளை அம்மா திட்ட முகாம்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:26

நாகர்கோவில்:

அம்மா திட்டத்தின் நான்காம் கட்ட சிறப்பு முகாம் நாளை குமரி மாவட்டத்தின் நான்கு தாலுகாக்களிலும் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அஞ்சுகிராமம் வருவாய் கிராமத்திற்கு மட்டும் வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியில் அம்மா திட்ட நான்காம்கட்ட முகாம் நாளை  (13ம் தேதி) நடக்கிறது. தோவாளை தாலுகாவில் குமாரபுரம் வருவாய் கிராமத்திற்கு மட்டும் குமாரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும். கல்குளம் தாலுகாவில் பேச்சிப்பாறை வருவாய் கிராமத்திற்கு மட்டும் பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு தாலுகாவில் கீழ் மிடாலம் "யு" வருவாய் கிராமத்திற்கு மட்டும் ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியிலும் நாளை காலை 10 மணியளவில் அம்மா திட்ட நான்காம்கட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.