பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம் :வாடிக்கையாளர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:26

மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  செல்போன் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியின் பயனாக ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், பணக்கராரர்கள் என அனைத்து தரப்பினரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு போட்டியாக தனியார் நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன. தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி வழங்கி வரும் நிலையிலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந்து செல்போன் சேவைகளை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வப்போது நெட்ஒர்க் முடங்கி போய் விடுவதால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தகவல்களை பரிமாறி கொள்ள இயலாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் சுமரர் 1 மணி நேரத்திற்கு மேலாக பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் போன் செய்ய இயலாமல் அவதி அடைந்தனர். பல முறை முயற்சி செய்தும் இணைப்பு கிடைக்காமலும், இணைப்பு கிடைத்தாலும் பேச இயலாமலும் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்ததை காண முடிந்தது. செல்போன் நெட்ஒர்க் சேவை பாதிக்கப்பட்டது தெரியாமல்  ஒரு  மணிநேரத்திற்கு மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இணைப்புகளுக்கு ட்ரை செய்த வண்ணம் இருந்தனர். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.